பணக்காரங்களுக்காகவே இந்த காரை கொண்டு வந்திருக்காங்க! அப்படி அதுல என்ன இருக்குது?

டொயோட்டா நிறுவனம் தனது புதிய லேண்ட் க்ரூஸர் 300 எஸ்யூவி காரில் ஹைபிரிட் வேரின்டை ஆஸ்திரேலிய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் லேண்ட் க்ரூஸர் மாடலில் வரும் முதல் ஹைபிரிட் காராகும். இந்த கார் உலகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்த கார் அறிமுகுமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் பவர்ஃபுல்லான காராக இந்த லேண்ட் க்ரூஸர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பவர்ஃபுல்லான காராக உருவாக்கபப்ட்டுள்ளுது. இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட் ஆப்ஷன் உடன் பொருத்தப்பட்டுகிறது. இது டபுள்டர்போ டீசல் இன்ஜின் வேரியன்டை விட அதிக பவரை வெளிப்படுத்துகிறது.

Toyota Land Cruiser 300 Hybrid

இந்த புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 ஹைபிரிட் கார் 3.5 லட்டர் ட்வின் டர்போ வி6 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் மோட்டார் ஜெனரேட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளுது. இந்த இன்ஜின் ஹைபிரிட் செட்டப்பில் 451 பிஎச்பி பவரையும், 790 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இதே இன்ஜின் தான் லெக்ஸஸ் எல்எக்ஸ்700எச் எஸ்யூவி காரிலும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கத. லேண்ட் க்ரூஸர் 300 காரில் 4 வீல்களுக்கும் பவர் செலுத்தப்படுகிறது. இதற்காக 10 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே டீசல் வேரியன்ட் கார் 3.3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி6 இன்ஜின் உடன் வழங்கப்பட்டுள்ளது. இது 304 பிஎச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

Toyota Land Cruiser 300 Hybrid

இந்த லேண்ட் க்ரூஸர் 300 ஹைபிரிட் மாடல் முழு பெட்ரோல் காரிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் பெரிய ஏர் இன்டேக் பகுதி, வித்தியாசமான பம்பர், உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பக்கம் உள்ள டொயோட்டா பேட்ஜிங் பெரியதாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உளு்ள அம்சங்கள் எல்லாம் பெ்டரோல் காரில் உள்ள அதே அம்சங்கள் தான் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ஸ்ட் கண்சோலில் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளுது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

Toyota Land Cruiser 300 Hybrid

தற்போது இந்தியாவில் டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் கார் விற்பனையில் தான் இருக்கிறது. இந்த கார் இந்தியாவில் இசட் எக்ஸ் வேரியன்ட் ரூ2.31 கோடி என்ற விலையிலும், ஜிஆர் ஸ்போர்ட் வேரியன்ட் ரூ2.41 கோடி என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கா ரின் விலை அதிகமாக இருப்பதால் மிக குறைவான நபர்களே இந்த காரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் தற்போது ஆஸ்திரேலிய மார்கெட்டில் தான் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இந்தியாவில் இந்த காருக்க மார்கெட் பெரியதாக இருக்கலாம். குறிப்பாக டில்லி பகுதியில் 10 ஆண்டுகள் பழைய டீசல் கார்கள் மீதான தடை உள்ளிட்ட காரணங்களால் பலர் இந்த காரை விரும்பி வாங்கலாம். அதிக பவர் மற்றும் ஹைபிரிட் டெக்னாலஜி இரண்டும் சேர்ந்த கலவை இருந்தால் ஏன் மக்கள் விரும்பமாட்டார்கள்? நிச்சயம் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 20, 2025, 11:00 [IST]
English summary
Toyota land cruiser 300 hybrid revealed with 451bhp power
மேலும்... #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X