30 நாளா முக்கி முக்கி வித்தும் ஒருத்தரு கூட இந்த காரை வாங்கல, ஏன் தெரியுமா?
டொயோட்டா நிவனத்தின் கடந்த ஜூன் மாதம் விற்பனை விபரத்தில் ஒரு கார் மட்டும் ஒருவர் கூட வாங்காமல் 0 விற்பனையை பெற்றுள்தாக தகவல் இடம் பெற்றுள்ளது. இப்படி ஒரு மாதம் முழுவதும் இந்தியாவிலேயே ஒருவர் கூட வாங்காத அளவிற்கான கார் எது? இதை ஏன் அந்நிறுவனம் இன்னும் விற்பனை செய்து வருகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களில் மொத்தம் 26,453 வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூன் மாதம் மொத்தம் 25,752 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த விற்பனையில் விரிவான தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அதில் முக்கியமான தகவல் என்னவென்றால் அந்நிறுவனம் கடந்த மாதம் முழுவதும் ஒரு லேண்ட் க்ரூஸர் 300 காரை கூட விற்கவிலை என குறிப்பிட்டுள்ளது. இது ஒன்று கடந்த மாத நிலை மட்டும் கிடையாது. நீண்ட ஆண்டுகளாக இந்த காரை விற்பனை அந்நிறுவனம் தடுமாறி வருகிறது. இந்த காரை ஏன் விற்கமுடியவில்லை என அந்நிறுவனம் எந்த விதமான விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை. தொடர்ந்து அந்த காரை விற்பனை செய்யப்படும் கார்களின் பட்டியலிலேயே வைத்துள்ளது.
இந்த காரை பற்றி நாம் தெரிந்து கொண்டால் இதை விற்பன செய்வதில் இருக்கும் சிரமத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை பொருத்தவரை மஸ்குலரான ஹூட் பகதி உள்ளது முன்பக்கம் வட்ட வடிவிலான ஹெட்லைட், டிஆர்எல், எல்இடி ஃபாக் லைட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளது.

இது போக இந்த காரில் சதுர வடிவிலான ஜன்னல், சைடு ஸ்டெப்பர், கருப்பு நிற ஃபென்டர்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், சில்வர் நிற ஏசி வென்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள், உட்டன் நிற டேஷ் போர்டு, 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், சென்டர் கன்சோலில் ரெட்ரோ லேண்ட் க்ரூஸர் லோகோ உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
லேண்ட் க்ரூஸர் 300 காரை பொருத்தவரை 3.5 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 415 பிஎஸ் பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 3.3 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல்இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 309 பிஎஸ் பவரையும் 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இன்ஜினும் 10 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்ப்டடுள்ளது. டொயோட்டா நிறுவனம் தனது லேண்ட்க்ரூஸர் 300 காரை ரூ2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வருகின்றன. இந்த வாகனங்கள் அதிக விலை காரணமாக கூட இந்த கார் விற்பனை இல்லாமல் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் க்ரூஸர் கார் பெரிய பிரபலங்கள் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் என பலர் இந்த காரை வாங்கும் வாய்ப்பு இந்தாலும் அந்த விலையில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு, அதே நேரம் போட்டி தயாரிப்பு அதிகம் இருப்பதால் விற்பனை குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









