கம்மி ரேட்டுக்கு விற்பனைக்கு வரும் பணக்காரர்கள் கார்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
டொயோட்டா நிறுவனம் தனது லேண்ட்க்ரூஸர் எஃப்ஜே மாடல் காரை முதன் முறையாக ஜப்பானில் நடந்து வரும் ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025ல் உருவாக்கியுள்ளது. இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வாகனம் மிகப்பெரிய வரவேற்ப்பைபெற்றுள்ளது. இது குறித்த விரிவானவிபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் கடந்த 1951ம் ஆண்டு தனது லேண்ட் க்ரூஸர் காரை முதன் முதலில் அறிமுகப்படுத்தியுது. இதன்பிறகு இதில் பல்வேறு அப்டேட்கள் வந்துவிட்டது. குறிப்பாக 300 சிரீஸ், 70 சிரீஸ் மற்றும் 250 சிரீஸ் ஆகிய மாடல்கள் உள்ளன. இந்நிலையில் இதில் புதிய சிரீஸாக எஃப்ஜே என்ற சிரீஸ் வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது நீடித்த உழைப்பு, நம்பகதன்மை, மற்றும் ஆஃப்ரோடு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த லேண்ட் க்ரூஸர் எஃப்ஜே வாகனம் பாக்ஸி வடிவமைப்பில் இருக்கிறது. இது பார்க்க கிட்டத்தட்ட எல்சி லைன்அப் போலவே இருக்கிறது. இதன் முன்பக்கம் சிறிய சட்ட வடிவிலான கிரில்ப பகுதி உள்ளது.இதில் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சி வடிவ டிஆர்எல்களும் உள்ளன. இது மார்கெட்டை பொருத்து வட்ட வடிவிலான ஹெட்லைட்டை பொருத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம் மார்கெட்டிற்கு தகுந்தார் போல வாகனத்தை கஸ்டமைஸ் செய்கிறது.
இந்த வாகனத்தில் முன்பக்கமும், பின்பக்கமும் பெரிய பம்பர்கள் வழங்கப்பட்டள்ளது. இதில் பல்வேறு டிசைனில் தனித்தனி பாகங்களாக உள்ளன. ஆஃப்ரோடு பயணத்தின் போது ஒரு பாகம் சேதமானால் அதை மட்டும் மாற்றிக்கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் சரியான அளவில் ஸோல்டர் லைன் மற்றும் ஸ்டிராங்கான பாடி கிளாடிங் ஆகிய அம்சங்கள் உள்ளது. இதன் ரூஃப் ரெயில் பகுதி கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்பக்க கதவு பகுதியில் ஸ்பேர் வீல் பொரத்தப்பட்டுள்ளது. பின்பக்க லைட்டுகள் நீள வாக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பகுதி அதிக அம்சங்கள் நிறைந்ததாக வழீங்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்பகுதியில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியன உள்ளன.
இந்தகாரில் ஆஃப்ரோடு கண்டரோல்கள் எல்லாம் சென்டர் கன்சோலில் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக பிஸிக்கல் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது கேபின் வசதியை அதிக பிராக்டிக்கல் தன்மையை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறம் மொத்தமாக லேண்ட் க்ரூஸர் 250 வாகனத்தில் உள்ளதை போல வழங்கப்பட்டுள்ளது.
இந்த லேண்ட் க்ரூஸர் எஃப்ஜே வாகனத்தை பொருத்தவரை 2.7 லிட்டர் 2TR FE 4சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.இது 161 பிஎச்பி பவரையும், 246என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு சூப்பர் இசிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பார்ட் டைம் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் க்ரூஸர் கார் இந்தியாவில் பிரபலமான காராக இருக்கிறது. இந்நிறுவனம் சிறப்பான வகையில் தனது வாகனத்தை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் இந்த லேண்ட்க்ரூஸர் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








