யாருக்கும் தெரியாமல் கமுக்கமா போன வெளிநாட்டு கார்! விலை 2 கோடினு சொல்றாங்க
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ Toyota Land Cruiser Prado), வெளிநாட்டுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள விலையுயர்ந்த டொயோட்டா கார். இது நம் இந்தியாவில் காட்சி தந்துள்ளது. இந்தியாவில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என ஒரு பேச்சு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த கார் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. கார் ஓட்டிச் செல்லப்படவில்லை, லாரி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று யூடியூப் (Youtube)-இல் வெளியாகி உள்ளது. என்னவா இருக்கும்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற பாரத் குளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் டொயோட்டா சார்பில் பல்வேறு வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டன. இன்னும் சில வருடங்களுக்கு பின் இந்தியாவில் தாங்கள் அறிமுகம் செய்ய உள்ள வாகனங்களை கூட டொயோட்டா கண்காட்சியில் காட்டி இருந்தது.

ஆனால், வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள லேண்ட் க்ரூஸர் பிராடோ காரை காட்சிக்கு நிறுத்தவில்லை. இருப்பினும், இந்தியாவில் இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. ஆனால், லேண்ட் க்ரூஸர் பிராடோ இல்லை.
இந்தியாவில் இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டாலும், தற்போது லாரியில் காட்சி தந்திருக்கும் லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் பூட்டான் நாட்டுக்காக லாரியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள லேண்ட் க்ரூஸருக்கும், லேண்ட் க்ரூஸர் பிராடோ காருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இன்னும் சொல்லப்போனால், பிராடோ கார் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தோற்றத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் காட்சி தந்திருக்கும் லேண்ட் க்ரூஸர் கார் பிலிப்பைன்ஸ் நாட்டில் விற்பனையில் இருப்பது ஆகும். மேலும், இது லேண்ட் க்ரூஸர் பிராடோ காரின் '250' என்கிற விலை குறைவான வெர்சன் ஆகும்.
ஒருவேளை இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் விலை ரூ.1.7 கோடி- ரூ.1.95 கோடி என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம். இந்தியாவில் லேண்ட் க்ரூஸர் 300 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2 கோடியாக உள்ளது. அதாவது, இதனை காட்டிலும் லேண்ட் க்ரூஸர் 250 பிராடோ காரின் விலை குறைவாகவே நிர்ணயிக்கப்படும்.

தற்போதைய லேண்ட் க்ரூஸர் 300 காரை போன்று புதிய 250 பிராடோ காரும் வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படலாம். தோற்றத்தை போன்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் லேண்ட் க்ரூஸர் பிராடோ விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த டொயோட்டா காருக்கு லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் சரியான போட்டியாக இருக்கும். தற்போது பூடானுக்கு எதற்காக இந்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்கிற விபரம் இல்லை. யாரேனும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications









