மொத்த குடும்பமும் ஒரே கார்ல போலாம்! 26 கிமீ மைலேஜ் வேற தருது! ஆனா இந்த ரேட்லதான் விக்கறாங்களா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா ரூமியான் காரின் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,775 ரூமியான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம், 833 ஆக மட்டுமே இருந்தது.
இதன் மூலம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையில் டொயோட்டா ரூமியான் 113 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இது இந்திய சந்தையில் ஏற்கனவே பிரபலமாக இருந்து வரும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் ஆகும்.

சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் மூலமாக டொயோட்டா நிறுவனம் இதனை செய்து வருகிறது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள காரணத்தால், அந்த காரை போலவே, டொயோட்டா ரூமியான் எம்பிவி காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கு இந்த காரின் விலை (Price), மைலேஜ் (Mileage) மற்றும் வசதிகள் (Features) போன்றவைதான் முக்கியமான காரணமாக உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 10.44 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் டொயோட்டா ரூமியான் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.73 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் இருப்பதிலேயே அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.
வசதிகளை பொறுத்தவரையில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் போன்றவை எல்லாம், டொயோட்டா ரூமியான் காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்றவை எல்லாம் டொயோட்டா ரூமியான் எம்பிவி காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருந்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது ஒரு 7 சீட்டர் கார் ஆகும். எனவே நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள சிறப்பம்சங்கள் உடன், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் மிகவும் ஏற்ற ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








