டொயோட்டாவில் இந்த கார் இருக்குறதே பலருக்கு தெரியல! கியா காரை வாங்குபவர்கள் இதையும் மைண்டில் வெச்சிக்கலாம்!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் கார், ரூமியன் (Rumion) ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் எம்பிவி (MPV) ரக காரான மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா கார் தான், ரூமியன் ஆகும். ஜப்பானிய கார் நிறுவனங்களான சுஸுகியும், டொயோட்டாவும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். எர்டிகாவில் வழங்கப்படும் நிறைய அம்சங்கள் டொயோட்டா ரூமியனிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், தோற்றத்தில் இரண்டிற்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன.

டொயோட்டா ரூமியன் எம்பிவி காருக்கு விற்பனையில் கியா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) முக்கிய போட்டியாக உள்ளது. கியா கேரன்ஸ் கிளாவிஸ் கார் ரூமியனை காட்டிலும் 1 லட்ச ரூபாய் அளவிற்கு விலைமிக்கது என்றாலும், நிறைய விஷயங்களில் இவை இரண்டும் ஒத்துப் போகின்றன. அதேநேரம் இவற்றிற்கு இடையே சில வித்தியாசங்களும் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

toyota rumion vs kia clavis

விலை: எஸ், ஜி, வி என மூன்று விதமான வேரியண்ட்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா ரூமியன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.54 லட்சத்தில் இருந்து ரூ.13.83 லட்சம் வரையில் உள்ளன. மறுப்பக்கம், கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.50 லட்சத்தில் இருந்து ரூ.21.50 லட்சம் வரையில் உள்ளன.

என்ஜின்: டொயோட்டா ரூமியன் காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் சிஎன்ஜி (CNG) வெர்சனிலும் ரூமியன் கார் விற்பனை செய்யப்படுகிறது. மற்றப்படி, எர்டிகா காரை போன்று டீசல் என்ஜின் ஆப்ஷனில் ரூமியன் விற்பனை செய்யப்படுவது இல்லை.

ஆனால், கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என்பன அந்த மூன்று என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். ரூமியன் காரை போன்று இந்த மூன்று என்ஜின் ஆப்ஷன்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமோட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப வசதிகள்: ரூமியன் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் என இரு கார்களிலும் போதுமான அளவிற்கு தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், சற்று உன்னிப்பாக பார்த்தால் ரூமியனை காட்டிலும் கேரன்ஸ் கிளாவிஸ் காரில் சற்று அதிக தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. கியாவின் சமீபத்திய லேட்டஸ்ட் காரான கேரன்ஸ் கிளாவிஸில் முக்கியமாக பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

இவை மட்டுமின்றி, வயர்லெஸ் மொபைல் சார்ஜர், கேபினை சுற்றிலும் விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவையும் கேரன்ஸ் கிளாவிஸ் காரில் வழங்கப்படுகின்றன. மறுப்பக்கம், சற்று குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ரூமியன் காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டில் பேடில் ஷிஃப்டர்ஸ் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சமயத்தில் இவ்வாறான அளவில் பெரியதான எம்பிவி கார்களை டாக்ஸி (Taxi) உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக தான் அதிகமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது குடும்ப பயன்பாட்டிற்காகவும் எம்பிவி கார்கள் அதிகம் பயன்படுத்தப்பட ஆரம்பித்துள்ளன. இதனை எர்டிகா கார் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறது என்றாலும், ரூமியன் அல்லது கேரன்ஸ் கிளாவிஸ் கார்களுள் ஒன்றையும் வாங்கலாம். கேரன்ஸ் கிளாவிஸ் காரை காட்டிலும் குறைந்த விலையில் கியா கேரன்ஸ் காரும் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 29, 2025, 16:26 [IST]
English summary
Toyota rumion mpv vs kia carens clavis mpv check full comparison here
மேலும்... #kia motors #toyota #car comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+