இப்படி ஒரு கார் இருக்குறதே பாதி பேருக்கு தெரியாது! ஆனா திடீர்ன்னு சேல்ஸ் எகிறிடுச்சு!

குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த ரக கார்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் விற்பனையில் இல்லாத கார் கடந்த ஏப்ரல் மாதம் டபுள் மடங்கு விற்பனை அதிகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். இதற்கு சான்றாக தற்போது அந்நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனையும் அதிகமாகியுள்ளது. அந்நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பி செக்மெண்ட் காரான டொயோட்டா ரூமியான் காரின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனை டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. ஏகப்பட்ட மக்கள் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

Toyota Rumion Sales

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் 2462 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 1192 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 106.54 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்த கார் மாருதியின் எர்டிகா காரின் டொயோட்டா பேட்ஜ் வெர்ஷன் காராக உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார் என்பதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

டொயோட்டா ரூமியான் காரை பொருத்தவரை மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு ஏற்றகாராக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 7 சீட்டர் ஆப்ஷன் இருக்கிறது. அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு தான் இந்த காரின் சிறப்பம்சமாக இருக்கிறது. இதனால் இந்த கார் குடும்பத்திற்கு ஏற்ற காராக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

Toyota Rumion Sales

மாருதியின் எர்டிகா காரை அடிப்படையாக கொண்டு தான் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. எர்டிகா கார் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது இந்த காரும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதற்கு முக்கியமான மற்றொரு காரணம் இந்த காரில் உள்ள சிஎன்ஜி ஆப்ஷன் தான்.

சிஎன்ஜி ஆப்ஷன் இருப்பதால் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த செலவில் வாகனத்ைட இயக்க முடியும். இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, பின்பக்க ஏசி வென்ட், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், மல்டி இன்ஃபர்மெஷன் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

Toyota Rumion Sales

இந்த கார் மார்கெட்டில் விற்பனையாகி வரும் மாருதி எர்டிகா, கியா கேரன்ஸ், ரெனால்ட் டிரைபர் உள்ளிட்ட வாகனங்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு டொயோட்டா நிறுவனம் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ வரை வாரண்டியை வழங்குகிறது. இதனால் மக்கள் நம்பிக்கையை இந்த நிறுவனத்தால் பெற முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது குடும்பத்துடன் பயணிக்கும் காரை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இருக்கும் நிலையில் டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே சிறப்பாக விற்பனையில் இருக்கும் எர்டிகா காரின் டொயோட்டா வெர்ஷன் மூலம் மக்கள் நம்பிக்கையை சம்பாதித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2025, 7:00 [IST]
English summary
Toyota rumion sales april 2025
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X