2 குடும்பம் ஒன்னா போற அளவு பெரிய கார் 27 கிமீ மைலேஜ் தருதா! மாருதி காரை வாங்கறதுக்கு பதிலா இதை வாங்கலாம்!

நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) காருக்கு மிகவும் சிறப்பான ஒரு மாதமாக அமைந்துள்ளது. டொயோட்டா ரூமியான் விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு வளர்ச்சியை சந்தித்திருப்பதுதான் இதற்கு காரணம். தற்போது வெளியாகியுள்ள டொயோட்டா ரூமியான் காருடைய நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் நமக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால் டொயோட்டா நிறுவனம் 2,462 ரூமியான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 1,192 டொயோட்டா ரூமியான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் டொயோட்டா ரூமியான் கார் விற்பனையில் 107 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது டொயோட்டா ரூமியான் காரின் விற்பனை அப்படியே இரட்டிப்பாகியுள்ளது.

Toyota Rumion Side Design

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும் கூட, டொயோட்டா ரூமியான் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1,793 டொயோட்டா ரூமியான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின்னர் வந்த ஏப்ரல் மாதம், இந்த எண்ணிக்கை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 2,462 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் பார்த்தாலும் டொயோட்டா ரூமியான் 27.17 சதவீத வளர்ச்சியை டொயோட்டா ரூமியான் பதிவு செய்துள்ளது. எனவேதான் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொயோட்டா ரூமியான் காருக்கு மிகவும் சிறப்பான ஒரு மாதமாக அமைந்துள்ளது என இந்த செய்தியின் தொடக்கத்திலேயே கூறினோம்.

Toyota Rumion

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா ரூமியான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது மாருதி சுஸுகி எர்டிகா காரில் ஒரு சில மாற்றங்களை செய்து டொயோட்டா நிறுவனம் அதை தன்னுடைய பிராண்டில் ரூமியான் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.

எனவே மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே டொயோட்டா ரூமியான் காரிலும், பயணிகளுக்கு தாராளமான இடவசதி கிடைக்கும். டொயோட்டா ரூமியான் காரில் 7 பேர் தாராளமாக பயணம் செய்ய முடியும். இந்த காரின் நீளம்/அகலம்/உயரம் ஆகியவை முறையே 4,420 மிமீ/1,735 மிமீ/1,690 மிமீ ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,740 மிமீ ஆக இருக்கிறது.

டொயோட்டா ரூமியான் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல்/5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் பெட்ரோல்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் சிஎன்ஜி/5 ஸ்பீடு மேனுவல் என மொத்தம் 3 வகையான இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்துமே சிறப்பான மைலேஜை (Mileage) வழங்க கூடியவை.

இவற்றின் மைலேஜ் முறையே 20.51/20.11/26.11 கிலோ மீட்டர்களாக உள்ளன. எனவே அதிக மைலேஜ் உடன், நிறைய பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் ஏற்றதாக இருக்கும். அத்துடன் இந்த காரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன என்பது கூடுதல் பலம்.

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபாலோ மீ ஹோம் வசதியுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஸ்மார்ட்வாட்ச் கனெக்டிவிட்டி, 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள் போன்றவை எல்லாம் இந்த காரின் முக்கியமான வசதிகளாக உள்ளன.

அத்துடன் புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் எண்ட்ரி, ஹில் ஹோல்டு அஸிஸ்ட், பிரேக் அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும் டொயோட்டா ரூமியான் காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பன்க்கி ப்ளூ, ரஸ்டிக் ப்ரவுன், ஐகானிக் க்ரே, கஃபே ஒயிட் மற்றும் என்டைசிங் சில்வர் என மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) டொயோட்டா ரூமியான் கார் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 45 லிட்டர்கள் ஆகவும், சிஎன்ஜி டேங்க் கொள்ளளவு 60 லிட்டர்கள் ஆகவும் உள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.54 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 13.83 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டொயோட்டா ரூமியான் கருதப்படுகிறது. டீசல் இன்ஜின் கிடையாது என்பது போன்ற குறைகள் இருந்தாலும் கூட, டொயோட்டா ரூமியான் காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதை தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ளலாம். மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களுக்கே உரித்தான சிறப்பான மைலேஜ், வசதிகள், ஓரளவிற்கு குறைவான விலை ஆகிய சிறப்பம்சங்களுடன், டொயோட்டா பிராண்டில் நிறைய பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் ஏற்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 16, 2025, 14:08 [IST]
English summary
Toyota rumion sales report april 2025 107 per cent growth
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+