26 கிமீ மைலேஜ்! 7 சீட்டர் டொயோட்டா காரின் விலை இவ்ளோ குறையுதா! ஷோரூம்ல கூட்டம் அலை மோத போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். அதாவது டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன.

இதன் அடிப்படையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. அப்படி டொயோட்டா நிறுவனத்தால் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான் ரூமியான். இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

Toyota Rumion Side Design

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 68 ரூமியான் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,721 ஆக இருந்தது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1,653 டொயோட்டா ரூமியான் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, டொயோட்டா ரூமியான் மிக கடுமையான வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

Toyota Rumion Airbag

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் டொயோட்டா நிறுவனம் 576 ரூமியான் கார்களை விற்பனை செய்திருந்ததாக வி3 கார்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதன் பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வெறும் 68 ஆக குறைந்துள்ளது.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில், 508 டொயோட்டா ரூமியான் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் வரும் மாதங்களில் டொயோட்டா ரூமியான் காரின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி (GST) வரி குறைப்புதான் இதற்கு காரணம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.81 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக, டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை குறையலாம். வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி அதிகாரப்பூர்வமாக குறையவுள்ளது. எனவே அதற்கு பிறகு டொயோட்டா ரூமியான் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ரூமியான் 7 சீட்டர் கார் ஆகும். இதன் சிஎன்ஜி இன்ஜின் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டொயோட்டா ரூமியான் கருதப்படுகிறது.

அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கும் கூட, டொயோட்டா ரூமியான் போட்டி மாடலாகதான் உள்ளது. அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலும், அதிக மைலேஜ் வழங்க கூடிய வகையிலும் ஒரு காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், டொயோட்டா ரூமியான் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 18, 2025, 14:34 [IST]
English summary
Toyota rumion sales report august 2025 just 68 units sold
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+