7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜை வாரி வழங்குதா! வாங்கறதுக்கு ஷோரூம்ல பெரிய க்யூவே நின்னுகிட்டு இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார்களில் (MPV Cars) ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களை டொயோட்டா நிறுவனம் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி எர்டிகாவை ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான்.
இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 2,099 ரூமியான் கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 730 ஆக மட்டுமே இருந்தது. இது 188 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது என்பதையே இந்த சேல்ஸ் ரிப்போர்ட் எடுத்து காட்டுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை 10.54 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 13.83 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காரும் 7 சீட்டர் ஆப்ஷனில்தான் கிடைத்து கொண்டுள்ளது. எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக டொயோட்டா ரூமியான் திகழ்கிறது. அத்துடன் இது நல்ல மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் உள்ளது.
டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டொயோட்டா ரூமியான் காரில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் போன்றவையும் டொயோட்டா ரூமியான் காரின் மிகவும் முக்கியமான வசதிகளாக கருதப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுடன், நல்ல மைலேஜ் வழங்குகிறது என்பது டொயோட்டா ரூமியான் காரின் மிகவும் முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகின்றன. அத்துடன் சிறப்பான வசதிகள் போன்ற அம்சங்களும் ஒருங்கிணைந்து, வாடிக்கையாளர்கள் விரும்பும் கார்களில் ஒன்றாக டொயோட்டா ரூமியானை மாற்றியுள்ளன.


Click it and Unblock the Notifications








