7 பேர் போற கார் 27 கிமீ மைலேஜ் குடுக்குதா! இந்த ரேட்டுக்கு கண்ண மூடிட்டு வாங்கலாம்! அவங்க தயாரிப்பாச்சே!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்களை டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அப்படி டொயோட்டா நிறுவனத்தால் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion).

இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காரும், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், டொயோட்டா ரூமியான் காரின் விற்பனை சிறப்பாக அமையவில்லை.

Toyota Rumion Airbag

ஆம், டொயோட்டா ரூமியான் கார் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெறும் 576 ரூமியான் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 1,929 டொயோட்டா ரூமியான் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,353 டொயோட்டா ரூமியான் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Toyota Rumion

இது 70 சதவீத வீழ்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, டொயோட்டா ரூமியான் கார் மிக கடுமையான வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது வி3 கார்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1,415 டொயோட்டா ரூமியான் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த ஜூலை மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 576 டொயோட்டா ரூமியான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த ஜூலை மாதத்தில், 839 டொயோட்டா ரூமியான் கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன.

இது 59.29 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் டொயோட்டா ரூமியான் மிகவும் பிரபலமான ஒரு கார் என்பதால், கூடிய விரைவிலேயே இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை வெறும் 10.81 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளது. இந்த விலை மற்றும் மைலேஜ் ஆகியவற்றுடன், 7 பேர் பயணம் செய்ய முடியும் என்பதும், டொயோட்டா ரூமியான் காரின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. ஆனால் டொயோட்டா ரூமியான் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதில்லை. எனினும் மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காரிலும் கூடிய விரைவில் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வசதியை எதிர்பார்க்கலாம்.

இது நடக்கும்பட்சத்தில், அது டொயோட்டா ரூமியான் காரின் ஒட்டுமொத்த பாதுகாப்பை அதிகரிக்கும் ஒரு விஷயமாக இருக்கும். அத்துடன் டொயோட்டா ரூமியான் கார், விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்கும், இந்த அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வசதி உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 15, 2025, 20:05 [IST]
English summary
Toyota rumion sales report july 2025 70 per cent down
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+