27 கிமீ மைலேஜ் தர்ற இந்த கார்ல 2, 3 குடும்பம் ஒன்னா போகலாம்! விலை இவ்ளோதானா! அப்ப கண்ண மூடிட்டு வாங்கலாம்!

இந்திய சந்தையில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களின் முதல் சாய்ஸ் 7 சீட்டர் எம்பிவி ரக கார்கள்தான். குறிப்பாக மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) எம்பிவி காரைதான் வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

அதேபோல், மாருதி சுஸுகி எர்டிகா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) காரையும் கூட, வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வத்துடன் தேர்வு செய்கின்றனர். டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருப்பது, நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

Toyota Rumion MPV

இதன் மூலமாக இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில், பெயரை மாற்றி விற்பனை செய்து வருகிறது. அப்படி டொயோட்டா நிறுவனத்தால் ரூமியான் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் ஒரு மாருதி சுஸுகி கார்தான் எர்டிகா.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா ரூமியான் மிகவும் பிரபலம். ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டொயோட்டா ரூமியான் காருக்கு சரியாக அமையவில்லை. தற்போது வெளியாகியுள்ள டொயோட்டா ரூமியான் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது.

Toyota Rumion Side Design

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 1,415 டொயோட்டா ரூமியான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கையானது, 1,566 ஆக இருந்தது. இது 10 சதவீத வீழ்ச்சி ஆகும்.

ஆனால் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், கூடிய விரைவிலேயே டொயோட்டா ரூமியான் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை 10.66 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.96 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ரூமியான் காரில் 7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய வகையில் ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்ற கார்கள் உடன், டொயோட்டா ரூமியான் போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கும் கூட, டொயோட்டா ரூமியான் மாற்று ஆப்ஷனாகதான் கருதப்படுகிறது. இந்திய சந்தையை போல், தென் ஆப்ரிக்காவிலும் கூட, டொயோட்டா ரூமியான் 7 சீட்டர் எம்பிவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 10, 2025, 23:26 [IST]
English summary
Toyota rumion sales report june 2025 10 per cent down
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+