26 கிமீ மைலேஜ்! 7 பேர் போற காரை டொயோட்டா இந்த ரேட்ல விக்குதா! மாருதி எர்டிகாவிற்கு பதிலா இதை வாங்கலாம்!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் (7 Seater MPV Cars) ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3,075 ரூமியான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2,169 டொயோட்டா ரூமியான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 906 டொயோட்டா ரூமியான் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் டொயோட்டா ரூமியான் கார் விற்பனையில் 42 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.44 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.62 லட்ச ரூபாயாக உள்ளது.

இவை அனைத்துமே டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், டொயோட்டா ரூமியான் காரின் அனைத்து வேரியண்ட்களிலும், ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட் மற்றும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் போன்ற வசதிகளையும், டொயோட்டா ரூமியான் கார் கொண்டுள்ளது.
மற்ற முக்கியமான தொழில்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஃபாலோ மீ ஹோம் அம்சத்துடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் போன்ற அம்சங்கள் எல்லாம், டொயோட்டா ரூமியான் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையில் பல்வேறு கார்கள் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பெரிய வெற்றியை பெற்றுள்ள கார்களில் ஒன்றாக டொயோட்டா ரூமியான் திகழ்கிறது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்ற கார்களுக்கு எல்லாம் டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.
அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு மாற்றாக ஒரு 7 சீட்டர் எம்பிவி காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களும் கூட, டொயோட்டா ரூமியான் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








