மக்கர் பண்ணாம 10 லட்சம் கிலோ மீட்டர் ஓடுது! இந்த கம்பெனி கார்களை மக்கள் கண்ண மூடிட்டு வாங்கறாங்க!
இந்திய சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டத்தை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக டொயோட்டா (Toyota) திகழ்கிறது. டொயோட்டா நிறுவனம் நம்பகத்தன்மை வாய்ந்த உயர் தரமான கார்களை விற்பனை செய்து வருவதுதான் இதற்கு காரணம். இதனால் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டொயோட்டா நிறுவனம் பதிவு செய்து வருகிறது.
இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும், டொயோட்டா நிறுவனம் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள டொயோட்டா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.

இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 32,575 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக 31,656 கார்களை மட்டுமே டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 919 கார்களை டொயோட்டா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் 3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்த 32,575 கார்களில், 29,159 கார்கள் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அதே நேரத்தில் எஞ்சிய 3,416 கார்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.
நடப்பு 2025 காலண்டர் வருடத்தில் தற்போது வரை (ஜனவரி-ஜூலை), டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,07,460 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024 காலண்டர் வருடத்தின் முதல் 7 மாதங்களில், டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,81,906 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்த்தால், டொயோட்டா நிறுவனம் 25,554 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 14 சதவீத வளர்ச்சி ஆகும். அதேபோல் நடப்பு 2025-26ம் நிதியாண்டில் தற்போது வரை (ஏப்ரல்-ஜூலை) டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,19,632 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஆனால் கடந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,04,861 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால் டொயோட்டா நிறுவனம் 14,771 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இதுவும் 14 சதவீத வளர்ச்சி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை மற்றும் உயர் தரமானவை. டொயோட்டா நிறுவனத்தின் ஒரு சில கார்கள் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவும் இன்றி 10 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் ஓடிய செய்திகளை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம்.
டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் எந்த அளவிற்கு நீடித்து உழைக்கும் என்பதற்கு, இந்த செய்திகள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போன்ற மிகவும் தரமான கார்களை விற்பனை செய்வதால்தான், டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








