10 லட்சம் கிமீக்கு மேல பிரச்னை இல்லாம ஓடுது! இந்த கம்பெனி கார்களை மக்கள் கண்ணை மூடிட்டு நம்பறாங்க!

இந்திய கார் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனங்களில் டொயோட்டா (Toyota) மிகவும் முக்கியமானது. பொதுவாக டொயோட்டா நிறுவனத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் மிகவும் குறைவு. இது டொயோட்டா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய உதவி செய்கிறது.

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் மிகவும் சிறப்பான ஒரு வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

Toyota Rumion Side Design

இதன்படி பார்த்தால் டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 30,864 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், 29,280 கார்கள் இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். எஞ்சிய 1,584 கார்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாகவே டொயோட்டா நிறுவனம் 25,273 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 22 சதவீத வளர்ச்சி ஆகும். டொயோட்டா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மொத்தம் 12 கார்களை விற்பனை செய்து வருகிறது.

Toyota Rumion

அவை க்ளான்சா, அர்பன் க்ரூஸர் டைசர், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ரூமியான், இன்னோவா க்ரிஸ்ட்டா, இன்னோவா ஹைக்ராஸ், ஃபார்ச்சூனர், லெஜெண்டர், வெல்ஃபையர், ஹிலக்ஸ், கேம்ரி மற்றும் லேண்ட் க்ரூஸர் 300 ஆகியவை ஆகும். ஆனால் இதில் ஒன்று கூட எலெக்ட்ரிக் கார் கிடையாது.

ஆனால் இந்த குறை கூடிய விரைவில் நிவர்த்தியாக உள்ளது. ஆம், இந்திய சந்தைக்கான டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக அந்த கார், டொயோட்டா அர்பன் க்ரூஸர் பிஇவி (Toyota Urban Cruiser BEV) ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஒன்று சிறிய பேட்டரி ஆகவும், மற்றொன்று பெரிய பேட்டரி ஆகவும் இருக்கலாம். இந்த 2 பேட்டரிகளில், பெரியதின் டிரைவிங் ரேஞ்ச் 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் பிஇவி எலெக்ட்ரிக் கார், கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா கார்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. இதன் ஒரு சில கார்கள் 10 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக ஓடிய நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம். இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு இது மிகவும் முக்கியமான காரணம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, June 1, 2025, 23:31 [IST]
English summary
Toyota sales report may 2025 22 per cent growth
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+