இனி ரோட்ல நடக்க கூட இடம் இருக்காது! ஜிஎஸ்டி குறைஞ்சதால இவ்ளோ கார் வித்துருச்சா! ஷோரூம்களில் மக்கள் வெள்ளம்!

இந்தியாவில் கார்கள் மீதான ஜிஎஸ்டி (GST) தற்போது குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, கார்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கார்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை போலவே, இந்தியாவில் கார்களின் விற்பனை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்துதான் ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதற்கு பிறகு, கடந்த செப்டம்பர் மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports), அக்டோபர் 1ம் தேதியான இன்று காலை முதல் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

Toyota Factory

ஒரு சில கார் நிறுவனங்களும், ஒரு சில கார்களும், விற்பனையில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்திருப்பது, இந்த சேல்ஸ் ரிப்போர்ட்கள் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளன. இந்த வரிசையில் டொயோட்டா நிறுவனமும் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்திருப்பதை தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் மூலமாக நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

டொயோட்டா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட், காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 31,091 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

Toyota Glanza

கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 16 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த 31,091 கார்களில் இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 27,089 ஆகும். எஞ்சிய 4,002 கார்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாத அளவில் மட்டுமல்லாது, நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் பாதியிலும் (6 மாதங்கள்) விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் - செப்டம்பர்), டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,84,959 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது 14 சதவீத வளர்ச்சி ஆகும்.

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு, டொயோட்டா நிறுவன கார்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரின் விலை தற்போது 3.49 லட்ச ரூபாய் வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் (Toyota Fortuner Legender) காரின் விலை 3.34 லட்ச ரூபாய் வரை குறைந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) காரின் விலை தற்போது 2.78 லட்ச வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டொயோட்டா ஹூலக்ஸ் (Toyota Hilux) பிக் அப் டிரக்கின் விலை 2.53 லட்ச ரூபாய் வரை குறைந்துள்ளது. மறுபக்கம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் விலை 1.81 லட்ச ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் விலை 1.16 லட்ச ரூபாய் வரை குறைந்துள்ளது. மறுபக்கம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) காரின் விலை 1.11 லட்ச ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் (Toyota Camry Hybrid) காரின் விலை 1.02 லட்ச ரூபாய் வரை குறைந்துள்ளது.

இந்த வரிசையில் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) காரின் விலை 85,300 ரூபாய் வரையிலும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரின் விலை 65,400 ரூபாய் வரையிலும், டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) காரின் விலை 48,700 ரூபாய் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் மாதங்களிலும், டொயோட்டா நிறுவனம் கார்கள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு கார் நிறுவனங்களும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதற்கு ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். விலை தற்போது வெகுவாக குறைந்திருப்பதால், புதிய கார்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக கார் ஷோரூம்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 1, 2025, 14:40 [IST]
English summary
Toyota sales report september 2025 16 per cent growth
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+