28.5 கி.மீ மைலேஜ் தரும் காரின் விலையை திடீரென உயர்த்திய டொயோட்டா! இப்ப என்ன ரேட் தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா டைசர் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காரின் விலையை ரூ2500 வரை அனைத்து வேரியன்ட்களிலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் விலை உயர்வு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சர்வதேச அளவில் சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி டொயோட்டா நிறுவனமும் சுஸூகி நிறுவனமம் தங்கள் தயாிப்புகளை பகிர்ந்து கொள்கின்றனர். இதன்படி டொயோட்டோவின் கார்களை மாருதி நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்கிறது.

Toyota Taisor Price Hike

அதே நேரம் மாருதி யின் கார்களை டொயோட்டா நிறுவனமும் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்கிறது. அதன்படி மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஃபிராங்க்ஸ் காரை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிது. தற்போது இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென இ்த காரின் அனைத்து வேரியன்ட்களின் விலையயும் அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.

தற்போது அனைத்து வேரியன்ட்களின் விலையும் ரூ2500 உயரத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ7.74 லட்சம் முதல் ரூ12.88 லட்சம் என்ற விலையில் விற்பைனயாகி வருகிறது. அதே நேரம் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் ரூ7.55 லட்சம் முதல் ரூ14.81 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. பேஸ் மாடலில் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் டாப் மாடலில் அதிக வித்தியாசம் இருக்கிறது.

Toyota Taisor Price Hike

மாருதி ஃபிராங்க்ஸ் மற்றும் டொயோட்டா டைசர் ஆகிய இரண்டுகளிலும் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது.

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 88.5 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது பெட்ரோல் மோடில் உள்ள பவர் தான் சிஎன்ஜியில் இயங்கும் போது இந்த வாகனம் 76.44 பிஎச்பி பவரையும் 98.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் அதிகபட்சமாக சிஎன்ஜியில் 28.5 கி.மீ மைலேஜை வெளியிப்படுத்தும் திறன் கொண்டது.

அதேபோல 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 98.6 பிஎச்பி பவரையும் 147.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல்மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி, 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் இந்த டைசர் காரின் விலையை உயர்த்தியிருந்தாலும் இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. ஆனால் வெறும் ரூ2500 தான் விலை உயர்வு என்பதால் பெரிய அளவில் இது விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்லாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 10, 2025, 12:05 [IST]
English summary
Toyota taisor price hike in all variants know full details
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+