எக்கசக்க ரேஞ்ச் தரும் டொயோட்டா இவி கார்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் பிஇவி காரை இந்தியாவிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரை அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் டொயோட்டா சுஸூகி இடையே உள்ள ஒப்பந்தப்படி இரு நிறுவனங்களும் தங்கள் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதன்படி மாருதி நிறுவனத்தின் இ விட்டாரா காரை அடிப்படையாக கொண்ட அர்பன் க்ரூஸர் பிஇவி என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இந்த கார் இந்தோனேஷியாவில் விற்பனையில் உள்ளது. அங்கு இந்த கார் இந்திய மதிப்பில் ரூ40.78 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வரகுஇறுது. இந்த கார் ழுமையாக கட்டமைக்கப்பட்டு அந்நாட்டில் விற்பனையாகி வருகிறது., இந்நிலையில்இந்த காரை இந்தியாவில் தயாரிக்க டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த கார் சர்வதேச மார்கெட்டில் 49kWh மற்றும் 61.1 kWhஆகிய 2 விதமான பேட்டரி பேக்குகளில் விற்பனையாகி வருகிறதுஉ இந்த கார் 172 எச்பி பவர் மறஅறம் 192 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. சர்வதேச மார்கெட்டில் விற்பனையாகி வரும் பிஇசட்4எக்ஸ் காரின் சிறிய வெர்ஷனாக இது அமையும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் டொயோட்டா நிறுவனத்தின் இன்டச் கனெக்டெட் சூட் வழங்கப்பட்டுள்ளுது. இது வாகனத்தை செல்போனிலேயே மானிட்டர் செய்யும் வசதி ஆக்ஸஸ் செய்யும் வசதி, காருடன் இன்டராக்ட் செய்யும் வசதிகளை வழங்குகிறது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் டொயோட்டாவின் முதல் இவி காராக இருக்கும் இந்த கார் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்த கார் ஹார்டிரெக்ட் பிளாட்ஃபார்மில் மாருதி நிறுவனம் தயாரிக்கும் இ-விட்டாரா கார் யதாராகும் அதே பிமாட்பார்மில்தான தயாரிக்கப்படுகிறது. இந்த இரு கார்களிலும் சில முக்கியமான உதிரி பாகங்கள் எல்லாம் ஒன்றாக தான் இருக்கிறது. இந்த இரு கார்களும் குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸூகி நிறுவனத்தின் ஆலையில் தான் தயாராகிறது.

மாருதியின் இ-விட்டாரா கார் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த கார் 2026ம் ஆண்டு இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த கார் மிட் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கராக விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இத்ன விலை குறுத்த ஆர்வம் தான் தற்போது அதிகமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இதன் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம். டொயோட்டா பிராண்டிற்காகவே சிலர் இந்த காரை வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் தயாரிப்பு எல்லாம் சுஸூகி தான். ஆனால் டொயோட்டா பிராண்டில் டொயோட்டா ஷோரூம்களில் தான் இந்த காரை வாங்க முடியும். இந்த கார் விற்பனைக்கு வந்தால் நீங்கள் வாங்குவீர்களா? என்ன விலைக்கு இந்த காரை எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









