டாடா, மஹிந்திரா எல்லாம் ஓரம்போ! இந்த இவி கார் வந்தா எல்லாரும் காலி தான்!

டொயோட்டா, அர்பன் க்ரூஸர் BEV எனும் புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தி இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன (EV) களத்தில் தனது நுழைவை ஏற்படுத்த அந்நிறுவனம் தயாராகி வருகிறது. பிரியஸ் கார் மூலம் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஐரோப்பாவில் வெளியான இந்த வாகனம், அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அர்பன் க்ரூஸர் என்பது மாருதி சுஸூகி மாடலின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட எடிசன் ஆகும். அதன் முன்னோடியாக ஒரு பெட்ரோல் SUVகா் உள்ளது, இந்த தொழிற்நுட்பம் இ-விட்டாரா காரிலிருந்து பெறப்பட்டது. இருப்பினும், இந்த காரின் வடிவமைப்பு e விட்டாரா காரை அடிப்படையாக கொண்டது, தற்போது இது முழு எலெக்ட்ரிக் வாகனமாக மாறியுள்ளது. முந்தைய பெட்ரோல் எடிசனை போலகுழப்பத்தைத் தவிர்க்க இந்திய மார்கெட்டிற்கான பெயர் மாற்றம் இருக்கலாம் என்று யூகங்கள் இருந்தாலும், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

Toyota Urban Cruiser BEV

அளவு குறித்துப் பார்க்கும்போது, அர்பன் க்ரூசர் BEV கார் ஒரு விசாலமான காராக தோன்றுகிறது. சர்வதேச அளவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் அளவுகள் 4,285 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,635 மிமீ உயரம், 2,700 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிது. இந்திய எடிசன் அளவுகள் இந்த எண்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய மார்கெட்டிற்கான டொயோட்டாவின் மூலோபாயத்தில் மூன்று வெவ்வேறு கட்டமைப்புகளில் எலெக்ட்ரிக் SUV வழங்கப்படுகிறது. பேஸ் எடிசன் 49 kWh LFP பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 106 kW (142 hp) மற்றும் 189 Nm மோட்டாரைப் பயன்படுத்துகிறது. ஒரு மிட் சைஸ் எடிசன் பெரிய 61 kWh LFP பேட்டரி மூலம் இந்த காரில் இணைக்கப்படுகிறது. பிரீமியம் மாடல் 135 kW (181 hp) மற்றும் 300 Nm டார்க்கின் ஒருங்கிணைந்த வெளியீட்டுடன் டுயல் மோட்டாரை கொண்டுள்ளது. இந்திய மார்கெட்டிற்க்கு, பேஸ் மற்றும் மிட்சைஸ் எடிசன்கள் மட்டுமே கிடைக்கக்கூடும். அதில் மிட் சைஸ் எடிசன் சுமார் 500 கிமீ ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Toyota Urban Cruiser BEV

புதிய அர்பன் க்ரூசர் BEV காரில் பல்வேறு நவீன அம்சங்களை எதிர்பார்க்கலாம். 18 இன்ச் அலாய் வீல்கள், 10 இன்ச்சிற்கும் அதிகமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் சீட்டுகள், 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்க சீட்டுகள், ஏழு ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்திய மார்கெட்டில் இந்த கார் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா கிரிலோஸ்கர் மோட்டார் (TKM), குஜராத்தின் ஹன்சல்பூரில் உள்ள தனது தொழிற்சாலையில் மாருதி சுஸூகி உற்பத்தி ஆதரவோடு அர்பன் க்ரூசர் எலெக்ட்ரிக் SUV ஐ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த காரின் விலையை பொருத்தவரை இந்தியாவில் ரூ15 முதல் 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் இந்தியாவின் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன மார்கெட்டில் சிறந்த போட்டியாளராக இருக்க விரும்புகிறது.

Toyota Urban Cruiser BEV

அர்பன் க்ரூசர் BEV மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டொயோட்டாவின் என்ட்ரி, நாட்டில் தனது பசுமையா வாகன பணியை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய படியை குறிக்கிறது. மேம்பட்ட அம்சங்கள், வசதியான மற்றும் விசாலமான உட்புறம் மற்றும் திறமையான எலெக்ட்ரிக் பவர் டிரெயின் ஆகியவற்றின் கலவையுடன், அர்பன் க்ரூசர் BEV நம்பகமான மற்றும் ஸ்டைலான எலெக்ட்ரிக் SUV-யை தேடும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை பொருத்தவரை எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தாக மஹிந்திரா நிறுவனமும் அதில் ஆதிக்கத்தை செலுத்த வருகிறது. இந்நிலையில் மாருதி மற்றும் டொயோட்டாவின் நுழைவு நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 10:45 [IST]
English summary
Toyota is introducing the Urban Cruiser BEV, its first all-electric SUV in India, expected to launch by mid-2025. With competitive pricing and advanced features, this model aims to strengthen Toyota's position in the Indian electric vehicle market.
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X