8, 9 பேர்னு கூட்டமா போனாலும் இடம் மிச்சம் இருக்கும்! புது டொயோட்டா கார் முன் வேன்கள் எல்லாம் ஒண்ணுமே இல்ல!!
டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து சமீப காலமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்கள் தான் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. அவ்வாறு, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட டொயோட்டா கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) ஆகும்.
டொயோட்டாவில் இருந்து ஹைப்ரீட் (Hybrid) என்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனை செய்யப்படும் காராக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் உள்ளது. இத்தகைய காரை விரைவில் 7-இருக்கை ஆப்ஷன் உடன் அறிமுகம் செய்ய டொயோட்டா தயாராகி வருகிறது. ஹைரைடர் கார் மட்டுமின்றி, மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா காரும் 7 இருக்கைகள் உடன் தயாராகி வருகிறது.

கிராண்ட் விட்டாரா 7-சீட்டர் கார் ஏற்கனவே சிலமுறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு இருந்த நிலையில், முதல்முறையாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 7-சீட்டர் கார் சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இவி என்கிற இந்தியாவிற்கான டொயோட்டாவின் முதல் எலக்ட்ரிக் காரும் தயாரிப்பு பணிகளில் உள்ளது.
அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 7-சீட்டர் கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இவி எலக்ட்ரிக் கார் இவை இரண்டில் முதலில் எது அறிமுகம் செய்யப்படும் என்பதுதான் தற்போதைக்கு கேள்வியாக உள்ளது. தற்போது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டு இருப்பது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இவி எலக்ட்ரிக் கார் கிடையாது என்று எதை வைத்து கூறுகிறோம் என்றால், இந்த சோதனை காரில் பின்பக்கத்தில் எக்ஸாஸ்ட் (Exhaust) குழாய் உள்ளது.

இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், காரின் தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லாததை தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் (Spy Images) காண முடிகிறது. அதாவது, தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் கொண்டிருக்கும் தோற்றத்தை தான் இதன் புதிய 7-சீட்டர் வெர்சனும் கொண்டிருப்பது போல் தெரிகிறது.
புதிய மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா 7-சீட்டர் காரில் ஏதேனும் வித்தியாசமான டிசைன் அம்சங்கள் கொண்டுவரப்பட்டால், அவற்றை நிச்சயமாக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 7-சீட்டர் காரிலும் எதிர்பார்க்கலாம். தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் ஸ்பை படத்தில் காரின் பின்பகுதியை மட்டுமே காண முடிகிறது என்றாலும், புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 7-சீட்டர் காரின் வெளிப்பக்கத்தை சுற்றிலும் பிரீமியம் தரத்திலான எட்ஜ்களை எதிர்பார்க்கலாம்.
புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 7-சீட்டர் காரின் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்களை இணைக்கக்கூடிய லைட் பாரை எதிர்பார்க்கலாம். 7-சீட்டர் ஹைரைடர் காரின் முன்பக்கத்தை முற்றிலும் புதிய டிசைனில் எதிர்பார்க்கிறோம். தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், மிக முக்கியமான லெவல்-2 அடாஸ் (ADAS) வசதி புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 7-சீட்டர் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரினுள் ஏற்கனவே ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. புதிய 7-சீட்டர் மாடலில் அந்த தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் 3 வரிசைகளில் இருக்கைகள் வழங்கப்பட உள்ளதால், இந்த புதிய கார் செயல்முறைக்கு இன்னும் ஏற்றதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, காரின் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் தற்சமயம் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.5லி நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே 4-வீல்-டிரைவ் சிஸ்டத்தை பெற முடிகிறது. 1.5 லிட்டர் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன் உடன் காரை சில கிமீ தொலைவிற்கு வெறும் எலக்ட்ரிக் பவரில் மட்டும் இயக்கி செல்ல முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு இந்தியாவில் ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்தகைய காரை 7 இருக்கைகள் உடன் கொண்டுவருவதன் மூலம், ஹைரைடரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இவி எலக்ட்ரிக் காருக்கு இணையாக நாங்கள் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 7-சீட்டரின் அறிமுகத்தையும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.
Source: 91Wheels


Click it and Unblock the Notifications








