28 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரை வாங்க மக்கள் க்யூல நிக்கறாங்க! இந்த விலைக்கு கிடைக்கும்போது விட்றுவோமா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9,100 அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 6,534 ஆக மட்டுமே இருந்தது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 2,566 டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனையில் 39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்த சிறப்பான வளர்ச்சியின் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி (Top 10 SUVs August 2025) கார்களின் பட்டியலில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், 7வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 6 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா, டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், டாடா பன்ச் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார், 7வது இடத்தை பிடித்துள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில், ஸ்மார்ட் வாட்ச் கனெக்டிவிட்டி, அட்வான்ஸ்டு வாய்ஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ரியர் ஏசி வெண்ட்கள், யூஎஸ்பி போர்ட்கள், 60:40 ஸ்பிளிட் சீட் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சமில்லை.
பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
அதே நேரத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் ஹைப்ரிட் இன்ஜின் அதிகபட்சமாக 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் கருதப்படுகிறது.
இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 10.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.76 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








