27.97 கி.மீ மைலேஜ் தரும் எஸ்யூவி கார்! இப்ப புக் பண்ணா டெலிவரி எடுக்க இவ்வளவு மாசம் ஆகுமா?

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸ் ஹைரைடர் காரை நீங்கள் வாங்க வேண்டும் என நினைத்தால் உடனடியாக வாங்கிவிட முடியாது. இந்த காரை வாங்கவேண்டும் என்றால் இன்று புக் செய்தாலும் 12 வாரங்கள் அதாவது குறைந்தது 3 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் இந்தியாவில் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி காராக இருக்கிறது. பவர்ஃபுல்லான லுக், சிறந்த அம்சங்கள், ஹைபிரிட் தொழிற்நுட்பம் என இந்த காரில் மக்களுக்கு பிடித்த பல விஷயங்கள் இருப்பதால் இந்த கார் மக்கள் விரும்பும் காராக இருக்கிறது. ஆனால் இந்த காரை இந்த ஜூன் மாதத்தில் வாங்க நினைத்தால்
உடனடியாக வாங்கிவிட முடியாது. இந்த காரின் சில வேரியன்ட்களுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

Toyota Hyryder Waiting Period June 2025

நீங்கள் டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் பெட்ரோல் இன்ஜின் வேரியன்டை வாங்க நினைத்தால் 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியது இருக்கலாம். சில டீலர்ஷிப்களில் ஸ்டாக் இருப்பதை பொருத்து 1 மாதத்திற்கு குறைவான காலம் கூட காத்திருப்பு காலம் இருக்கிறது. மெட்ரோ நகரங்களில் இருந்து இந்த காரை புக் செய்தால் காத்திருப்பு காலம் குறைவாக தான் இருக்கும்.

டொயோட்டா ஹைரைடர் காரின் ஸ்டிராங்க் ஹைபிரிட்வேரியன்ட் மக்கள் மத்தியில் பிரபலமான மாடலாக இருக்கிறது. இதற் முக்கியமான காரணம் சிறந்த மைலேஜ் மற்ம் மற்றும் குறைந்த பெட்ரோல் செலவு தான். இதன் காரணமாக இந்த ரக வேரியன்டிற்க டிமாண்ட் மிக அதிகமாக உள்ளது. இதனால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் 2-3 மாதங்கள் வரை இருக்கிறது.

Toyota Hyryder Waiting Period June 2025

டொயோட்டா நிறுவனத்தின் சிஎன்ஜி வெர்ஷன் காரும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. இஈந்த காரும் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த எரிபொருள் செலவை ஏற்படுத்தும் காராக உள்ளது. இந்த காருக்கும் காத்திருப்பு கலம் 2-3 மாதங்கள் வரை இருக்கிறது. டீலர்ஷிப்களில் உள்ள ஸ்டாக்கை பொருத்து நீங்கள் இந்த காரை விரைவாக பெற கூட வாய்ப்புள்ளது.

இந்த நீண்ட காத்திருப்பு காலத்திற்கு முக்கியமான காரணம் இந்த காருக்கு பெருகி வரும் டிமாண்ட் தான். இந்த காரை அந்நிறுவனம் தயாரிக்கும் அளவை விட விற்பனை அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக சில கலர் ஆப்ஷன்கள் மற்றும் வேரியன்ட்களுக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளதால் இந்த ரக கார்களுக்கு அதிக காத்திருப்பு காலம் இருக்கிறது.

Toyota Hyryder Waiting Period June 2025

இந்த டொயோட்டா ஹைரைடர் கார் ஹைபிரிட் வேரியன்டில் 27.97 கி.மீ மைலேஜை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த காரை முழுமையாக இவி மோடில் கூட இயக்க முடியும். இது போக இந்த காரில் அடாஸ் தொழிற்நுட்பம் 6 ஏர்பேக்குகள் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த கார் ஒரு எஸ்யூவி காராக இருந்தும் அதிக மைலேஜ் தருவதால் மக்கள் பலர் விரும்புகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு எப்பொழுதும் டிமாண்ட் இருக்கும். அதன்படி தான் தற்போது ஹைரைடர் காருக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. மேலே வழங்கப்பட்ட காத்திருப்பு காலம் பொதுவான விஷயம் தான். நீங்கள் இந்த காரை புக் செய்ய நினைத்தால் அருகில் உள்ள டீலர்ஷிப்க்கு சென்று அங்கு நீங்கள் வாங்க நினைக்கும் வேரியன்ட் மற்றும் கலர் ஆப்ஷனை சொல்லி சரியான காத்திருப்பு காலத்தை தெரிந்து கொள்ளுங்கள். டீலர்ஷிப், வேரியன்ட், கலர் ஆப்ஷனை பொருத்து காத்திருப்பு காலம் மாறுபடலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2025, 7:00 [IST]
English summary
Toyota urban cruiser hyryder waiting period in june 2025 check all details
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X