7 சீட், சொகுசு பங்களா மாதிரி வசதிகள் இருந்தும் இந்த காரை வெறும் 29 பேர் தான் வாங்கியிருக்காங்க! ஏன் தெரியுமா?
டொயோட்டா நிறுவனம் தனது எம்பிவி காரான வில்ஃபயர் காரின் விற்பனையில் மிகப்பெரிய சரிவை கடந்த மே மாதம் சந்தித்துள்ளது. கடந்தண்டு விற்பனையில் கிட்டத்தட்ட பாதி விற்பனை குறைந்துள்ளது. இவ்வளவு தூரம் குறைவான விற்பனையை இந்த கார் பெறுவதற்கு என்ன காரணம்? இதனால் எப்படியான விளைவுகளை அந்நிறுவனம் சந்திக்க போகிறது விரிவாக காணலாம் வாருங்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனத்தின் எம்பிவி காரான வில்ஃபயர் காரின் கடந்த மே மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில் இந்த காரின் விற்பனை கணிசமான அளவு சரிவை சந்தித்துள்ளது. கடந்தாண்டு விற்பனையான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி கார்கள் தான் கடந்த மே மாதம் விற்பனையாகியுள்ளது.

கடந்த மே மாதம் டொயோட்டா வில்ஃபயர் காரின் விற்பனையை பொருத்தவரை 29 வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த காரை வாங்கியுள்ளனர். 31 நாளில் 29 வாடிக்கையாளர்கள் மட்டுமே வாங்கியுள்ள நிலையில் சராசரியாக தினமும் ஒரு காருக்கும் குறைவான எண்ணிக்கையில் தான் இந்த கார் விற்பனையாகியுள்ளது. இது கிட்டத்தட்ட53 சதவீதம் கடந்தாண்டு விற்பனையை விட குறைவாகும்.
டொயோட்டா வில்ஃபயர் காரை பொருத்தவரை 14 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 14 கலர் ஆம்பியன்ஸ் லைட்டிங், முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 15 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், டுயல் பேன் சன் ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், வாகன ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மேலும் இந்த காரில் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் மொத்தம் 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஹை மற்றும் விஐபி எக்ஸிக்யூடிவ் லாஞ்ச் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகி வருகிறது. இது இந்தியாவில் பிரபலங்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது.
இந்த டொயோட்டா வில்ஃபயர் காரை பொருத்தவரை 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 193 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.

அதன்படி இந்த கார் கருப்பு, பிரீஸியஸ் மெட்டல், மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ1.22 கோடி முதல் ரூ1.32 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராகஇருக்கிறது. அதிக கஸ்டமைஸேஷன் ஆப்ஷன் இருப்பதால் இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் விற்பனை சரிவுக்கு இதன் விலை முக்கிய காரணமாக உள்ளது. அதே நேரம் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளும் வந்துவிட்டதால் இந்த காரின் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்தால் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications









