விலை ரொம்ப கம்மி தான்! சரக்கு ஆட்டோல இவி! லோடு செமயா இழுக்கும்!
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இன்று தனது கிங் கார்கோ எச்டி இவி என்ற வாகனத்தை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் அர்பன் மற்றும் செபி அர்பன் பகுதியில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளுது. இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் தனது கிங் கார்கோ எச் வாகனத்தை நவீன தொழிற்நுட்பம், சிறந்த வடிவமைப்பு, அதிக பெர்ஃபார்மென்ஸ், மற்றும் அதிக நம்பக தன்மையுடன் பயன்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த கிங் கார்கோ எச்டி வாகனத்தில் சிஎன்ஜி வேரியன்டையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள பெட்ரோல் வேரியன்ட் விரைவில் டெலிவரி செய்யப்படும் சிஎன்ஜி வேரியன்ட் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்க வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிங் கார்கோ எச்டி வாகனம் பாதுகாப்பு, சொகுசு, மற்றும் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்களை லாஸ்ட் மைல் டெலிவரி ஆப்ரேட்டர்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கியுள்ளது.
இந்த வாகனத்தில் செக்மெண்டிலேயே முதன் முறையாக உள்ள பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், இரவு நேர விசிபிளிட்டிக்காக சிறப்பான லைட்டிங், அதிக இடவசதி கொண்ட கேபின், முழுமையாக ரோல் செய்யக்கூடிய ஜன்னல் கண்ணாடி, வென்டிலேஷன் அதிகமாக இருக்க ஸ்டைலிஷான டோர் வடிவமைப்பு ஆகிய அம்சங்கள் உள்ளன.

மேலும் இ்நத வாகனத்தின் பவர் கியர் மோடு அம்சம் இருகு்கிறது. இதில் அதிக டார்க்கை முழு லோடு இருக்கும் போது வெளிப்படுத்தஉதவும், மேலம் இந்த வாகனம் இந்தியாவிலேயே முதன் முறையாக ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்ட சரக்கு 3 வீலர் வாகனம் ஆகும். இதில் டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் அம்சம் இருக்கிறது. இதன் மூலம் 26 விதமான ஸ்மார்ட் அம்சங்களை பயன்படுத்த முடியும்.
இந்த காரில் பின்பக்க வியூ மிரர்கள், விசிபிளிட்டி மேம்பாடு, பாதுகாப்பான நேவிகேஷன் வசதி சிட்டி பகுதிக்குள் இடம் தெரியாமல் பலர் திண்டாடும் பிரச்சனை போக்குவதற்காக இது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தின் டிவிஎஸ் கனெக்ட் ஃப்ளீட் அம்சம் இருக்கிறது. இது வெப் அடிப்படையிலான தளமாக செயல்படும். ஒரே நேரத்தில் பல வாகனங்களை வாங்கி பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு இது வசதியாக இருக்கும்.

இதில் 31 விதமான அம்சங்களை பயன்படுத்த முடியும், ரியல் டைம் டிராக்கிங் மூலம் ஒவ்வொரு வாகனத்தையும் டிராக் செய்ய முடியும். இது போக ரிமோட் அசிஸ்ட் கண்ட்ரோல், ஏபிஐகள், அலர்ட்கள், ரிப்போர்ட், ரிமைண்டர், இன்டலிஜென்ட் டேஷ்போர்டு, ஆப்டிமல் வெஹிகிள் யூட்டிலைசேஷன், மேம்படுத்தப்பட்ட அப்டைம் உள்ளிட்ட ஏப்பட்ட மு்சங்கள். இருக்கிறது.
இந்த டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி இவி வாகனம் மணிக்க 60 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த வாகனத்தின் உள்ள பேட்டரியை வெறும் 3 மணி நேரம் 10 நிமிடத்தில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இந்த வாகனத்தில் 235 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 703 மிமீ உயரத்தில் லோடிங் பலகை, 500 மிமீ அளவிலான தண்ணீரில் செல்லும் வசதி, இருக்கிறது. இந்த வாகனம் முதற்கட்டமாக டில்லி மற்றும் என்சிஆர் பகுதிகள், ராஜஸ்தான்,மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வாகனம் ரூ3.85 லட்சம் என்ற விலையில் மட்டுமே கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சரக்கு வாகனங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் செயல்படும் டிவிஎஸ் நிறுவனம் இப்படி ஒரு வாகனத்தை தயாரித்தது நிச்சயம் நமக்கு பெருமை தான் ஆனால்இந்த வாகனம் தமிழகத்தில் தற்போது விற்பனைக்கு வரவில்லை. வந்தால் நிச்சயம் விற்பனை நிச்சயமாக அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









