கார் விற்பனைக்கு உலை வைப்பதற்கென்றே வந்திருக்கும் டிவிஎஸ் இ-ஆட்டோ.. பேருலையே கிங் இருக்கு! விலை ரொம்ப கம்மி!
டிவிஸ் (TVS) நிறுவனம் தன்னுடைய புதுமுக எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சா (Electric Three-Wheeler)-வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இன்றைய நவீன கால கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் ஆட்டோவையே டிவிஎஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் (TVS King EV MAX), இந்த எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சாவையே டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதில் வேறு எந்தவொரு எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சாவிலும் காணக்கிடைக்காத அம்சங்கள் சிலவற்றை டிவிஎஸ் நிறுவனம் சேர்த்திருக்கின்றது.
அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு (Bluetooth Connectivity) வசதியே இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸோன்னக்ட் (TVS SmartXonnect) இணைப்பு வசதியை பெற்றுக் கொள்ளவே ப்ளூடூத் இணைப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவிலேயே இந்த அம்சத்தைப் பெறும் முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ இதுவே ஆகும்.

டிவிஎஸ் நிறுவனம் தன்னுடைய பிரீமியம் இரண்டு சக்கர வாகனங்களில் மட்டுமே இந்த அம்சத்தை வழங்கி வந்தநிலையில் முதல் முறையாக தற்போது ஆட்டோவிலும் வழங்கி இருக்கின்றது. அதேவேளையில், வேறு எந்த ஆட்டோவிலும் இந்த அம்சத்தைக் காண முடியாது. இதற்கு அறிமுகமாக விலையாக 2.95 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவின் அறிமுகத்தின் வாயிலாக தான் ஓர் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்பதை டிவிஎஸ் நிறுவனம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கின்றது. ஆட்டோ காதலர்களை ஈர்க்கும் விதமாக 6 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிமீ வாரண்டியை டிவிஎஸ் அறிவித்திருக்கின்றது.
இத்துடன், மூன்று ஆண்டுகளுக்கு 24/7 ரோடு அசிஸ்டன்ஸை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கவும் முன் வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் இந்த அறிவிப்பும், அதில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களையும் ஒட்டுமொத்த வாகன காதலர்களையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, கார் காதலர்களையும் கவரும் டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் உள்ளது.
ஆகையால், விற்பனையில் இந்த ஆட்டோ கார்களுக்கே டஃப் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்பவே அதன் ரேஞ்ச் தரும் திறனும், வேக திறனும் உள்ளது. டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் ஓர் முழு சார்ஜில் 179 கிமீ வரை ரேஞ்ச் தரும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்களே போதுமானது.
பேட்டரி பேக்கை பொருத்த வரை இந்த ஆட்டோவில் 51.2V திறன் கொண்ட லித்தியம் அயன் எல்எஃப்பி வகை பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இந்த ஆட்டோவின் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீட்டராக உள்ளது. இதில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 30 கிமீ எனும் வேகத்தை எட்ட இந்த ஆட்டோவிற்கு வெறும் 3.7 செகண்டுகளே போதுமானது.
இந்த ஆட்டோ 500 மிமீ ஆழமான நீர் நிலையைகூட சமாளிக்கும் என்பது அதன் கூடுதல் சிறப்பாகும். இத்துடன், ஆட்டோவிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக எல்இடி ஹெட்லைட், சிறிய டிஜிட்டல் திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடனேயே நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட் எக்ஸோன்னக்ட் அம்சத்தை வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக ரியல்-டைம் நேவிகேஷன், முக்கிய அறிவிப்புகள் என ஏகப்பட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார ஆட்டோக்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நாட்டில் தற்போது எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் ஆட்டோரிக்சா விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








