பாதி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கார்! போருக்கு நடுவே மோடி செய்த மாஸ்டர் ஸ்டோக்!

இந்தியாவில் உள்ள சொகுசு கார் மார்கெட்டையே மாற்றும் வகையில், இங்கிலாந்து-இந்தியா இலவச வர்த்தக ஒப்பந்தம் (FTA) உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கான வரி கட்டணம் 100%லிருந்து 10% ஆக குறைக்கப்படும். இதன்மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த வாகனங்கள் குறைவான விலையில் கிடைக்கும். இறக்குமதி வரியில் இந்த குறிப்பிடத்தக்க குறைப்பு இருதரப்பு வர்த்தகத்தை அதிகரித்து பிரிட்டிஷ் கார் உற்பத்தியாளர்களுக்கும் இந்திய நுகர்வோர்களுக்கும் பயனளிக்கும்.

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளில் ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கிறது. இது ஜாகுவார் லேண்ட் ரோவர், அஸ்டன் மார்ட்டின், பென்ட்லி, மெக்லாரன் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பிரீமியம் கார்களை இந்திய வாடிக்கையார்களுக்கு குறைவான விலையில் கிடைக்கச் செய்யும். இறக்குமதி வரிகளால் ஏற்கனவே அதிக விலையில் இருந்த மாடல்களின் விலை குறைந்து, விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Uk-India Free Trade Agreement

புதிய வரி கட்டண அமைப்பின் கீழ், ஏற்கனவே அதிக இறக்குமதி வரி கட்டணம் செலுத்தப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடலின் விலை கணிசமாக குறையும். எடுத்துக்காட்டாக, அஸ்டன் மார்ட்டின் வேன்விஷ் காரின் விலை ஒப்பந்தத்திற்குப் பிறகு ரூ.8.85 கோடியிலிருந்து ரூ.4.86 கோடியாக (எக்ஸ்-ஷோரூம்) குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் விலை ரூ. 1.45 கோடியிலிருந்து ரூ. 79.75 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) குறையக்கூடும்.

மூன்று ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் FTA இறுதி செய்யப்பட்டது. 2040 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு GBP 25.5 பில்லியன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பெரிய மார்கெட்டை பிரிட்டிஷ் கார் உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடுகிறது. 2024 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ரூ.650 கோடி மதிப்புள்ள மோட்டார் கார்கள், ரூ.30 கோடி மதிப்புள்ள பைக் மற்றும் ரூ.1,150 கோடி மதிப்புள்ள ஆட்டோ பாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

Uk-India Free Trade Agreement

வரி கட்டண குறைப்பு இந்தியாவில் பிரிட்டிஷ் தயாரிப்பு கார்களின் விலையை குறைக்கும். எடுத்துக்காட்டாக, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை ரூ.6.95 கோடியிலிருந்து ரூ.3.82 கோடியாக (எக்ஸ்-ஷோரூம்), பென்ட்லி பென்டேய்கா காரின் விலை ரூ.4.10 கோடியிலிருந்து ரூ.2.25 கோடியாக (எக்ஸ்-ஷோரூம்) குறையக்கூடும். இந்த மதிப்பீடுகள் வரி கட்டண குறைப்புகள் முழுவதுமாக நுகர்வோருக்கு கடத்தி வழங்கப்படுமெனக் கொள்கின்றன.

இருப்பினும், வரி, கஸ்டமைஸேஸன் மற்றும் உற்பத்தியாளரின் விலை நிர்ணய முறைகள் ஆகியவற்றின் காரணமாக உண்மையான விலை குறைவில் நாம் சொன்னதை விட விலை வேறுபடலாம். கோட்டா க்கு வெளியே இருக்கும் அல்லது வரிக் குறைப்பிற்கு தகுதி பெறாத வாகனங்களில் விலையில் குறைந்த குறைப்பு இருக்கலாம். இது குறித்த விரிவான விபரங்கள் எல்லாம் வருங்காலங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Uk-India Free Trade Agreement

இந்த ஒப்பந்தம் அடுத்த ஒரு வருடத்திற்குள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறது. ஆனால் இங்கிலாந்தில் இருந்து குறை ஆடம்பர வாகனங்களை தேடும் இந்திய கார் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை நிறைந்த அவகாசங்களை அளிக்கிறது. அதே சமயத்தில், இங்கிலாந்து கார் உற்பத்தியாளர்கள் உலகின் வேகமாக வளரும் மார்கெட்களில் ஒன்றை அணுகுகிறார்கள்.

இந்தியாவில் சொகுசு கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போது இந்த வரி குறைப்பு வருகிறது. இதனால் இந்தியாவில் பல முக்கியமான கார் பிராண்டுகள் தங்கள் விற்பனையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை பயன்படுத்தி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கும் யுக்தியை இனி யோசிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் 99 சதவீத பொருட்களுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களை நேரடியாக இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி மூலம் சிறப்பான விற்பனையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் ஆட்டோமொபைல் துறைக்கு மட்டுமல்லாமல் மற்ற துறைகளுக்கும் சிறப்பாக வளர்ச்சியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறை மார்கெட்டில் இந்த ஒப்பந்தம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். பல சொகுசு கார்கள் நிறுவனங்கள் தற்போது விற்பனையில் தள்ளாடி வரும் நிலையில் இந்த மாற்றம் சிலருக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வாகனங்களின் விலை கிட்டத்தட்ட பாதியாக குறைவதால் அதன் விற்பனை பல மடங்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த அதன் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர்களை அதிகரித்து தங்கள் பிஸ்னஸை அதிகப்படுத்த வாய்ப்பு அதிகம் உ்ளளது. ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட குறைந்த விலையில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய முடியும்.

விலை குறைவதால் அந்நிறுவனத்திற்கு லாபம் கிடைக்காது என்று எல்லாம் நினைக்க வேண்டாம். தற்போது அந்நிறுவனம் என்ன விலையில் விற்பனை செய்து எவ்வளவு பணம் சம்பாதிக்கிறதோ அதே பணத்தை தான் இதற்கு பிறகும் சம்பாதிக்கும். ஆனால் இவ்வளவு காலம் விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத வரி என்பது இனி 10 சதவீதமாக குறைக்கப்படும்.

இதனால் அரசுக்கு வரும் வருமானம் மட்டுமே குறையும். இரு நாட்டிற்கும் இடையே நல்லுறவை பேணுவதற்காகவும், இ்நதியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு தேவையில்லாத வரி விதிக்கப்படுவதையும் இது தடுக்கும். இதனால் இரு நாட்டிற்கும் இடையே வர்த்தக உறவு சிறப்பாக இருக்கும். வர்த்தக உறவு சிறப்பாக இருந்தால் இனி கலாச்சார உறவுகளும் ஒரு பாலம் அமைக்கப்பட்டு பரிமாறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொகுசு கார்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்தால் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் சொகுசு கார்களில் உள்ள வசதி மற்றும் தொழிற்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். மக்கள் மத்தியில் இரு கார்களுக்கும் இடையேயான ஒப்பீடு ஏற்படும். அதனால் பலர் சொஞ்சம் அதிகம் விலை கொடுத்து இங்கிலாந்து கார்களை வாங்க கூடும். அவர்களுடன் போட்டி போட வேண்டும் என்றால் இந்திய நிறுவனங்களும் தங்கள் கார்களை அதற்கு ஏற்றார் போல அப்டேட் செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்யத்திற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு முக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வாகும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதோடு நுகர்வோருக்கும் உற்பத்தியாளர்களுக்கும் தெளிவான பயன்களை அளிக்கிறது.

FAQs
இலவச வர்த்தக ஒப்பந்தம் மூலம் இறக்குமதி செய்யப்படம் கார்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாதா?

இந்தியா இங்கிலாந்து இடையேயான இலவச வர்த்தக ஒப்பந்ததில் வாங்கப்படும் கார்களுக்கு இறக்குமதி வரி மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. மற்ற வரிகள் அனைத்தும் பொருந்தும்.

இலவச வர்த்தக ஒப்பந்தம் என்றால் வரி இல்லாமல் கார் கிடைக்குமா?

இந்த ஒப்பந்தம் மூலம் பெரும்பாலான பொருட்களை இறக்குமதி வரி இல்லாமல் இந்தியாவிற்குள் கொண்டு வரலாம். சொகுசு கார்களை பொருத்தவரை 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 

இலவச வர்த்தக ஒப்பந்தத்தால் எவ்வளவு வரி குறைக்கப்படும்?

தற்போது வரை 100 சதவீதமாக இருக்கும ்வரி 10 சதவீதமாக குறைக்கப்படும். 

எந்தெந்த நிறுவனங்களின் கார்களின் விலை குறையும்?

ஜாகுவார் லேண்ட் ரோவர், அஸ்டன் மார்ட்டின், பென்ட்லி, மெக்லாரன் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பிரீமியம் கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2025, 23:00 [IST]
English summary
The UK-India Free Trade Agreement cuts tariffs on luxury cars, reducing prices for models from Jaguar, Aston Martin, and Rolls-Royce. This deal enhances trade relations and benefits both British manufacturers and Indian consumers.
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X