1 கி.மீக்கு ரூ2 செலவில் ஒரு குடும்பமே காரில் பயணிக்கலாம்! இத்தனை கார் வருதா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல தனது மார்கெட்டை பங்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வரிசையாக எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி தங்கள் போர்ட்போலியோவை விரிவுபடுத்தி வருகின்னர். இந்நிலையில் பல்வேறு கார்கள் அடுத்து அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. அதன்படி குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்கள் எந்தெதந்த நிறுவனங்களால் என்ன பெயரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது? இதில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனம் சமீபத்தில் தான் தனது கேரன்ஸ் கிளாவிஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு எம்பிவி ரக கார் ஆகும். இ்நத கார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Upcoming 3 Family EVs

இந்த கார் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்படுவதை நாம் காண முடிகிறது. இந்த இவி கார் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா இவி காரின் பல்வேறு அம்சங்களை அப்படியே பெறம் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக பேட்டரி பேக், எலெக்ட்ரிக் மோட்டார் எல்லாம் அந்த காரில் இருப்பது போலவே அமைய வாய்ப்புள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 400 கி.மீ பயணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காரை அடிப்படையாக கொண்ட மஹிந்திரா எக்ஸ்இவி 7இ காரை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக டெக்னிக்கல் அம்சங்கள், சொகுசு வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம் பெறும்.

Upcoming 3 Family EVs

இந்த காரின் கான்செப்ட் வெர்ஷன் போல தான் இந்த காரின் வடிவமைப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 59 கிலோ வாட் ஹவர் மற்றும் 79 கிலோ வாட் ஹவர் ஆகிய இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்லாம். இந்த கார் 3 வரிசை சீட்டர் கொண்ட 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் காராக விற்பனைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காருக்கு சார்ஜ் ஏற்றினால் 79 யூனிட் மின்சாரம் செலவாகும். அதற்கு 400 கி.மீ ரேஞ்ச் குடுத்தால் ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ2 தான் செலாவகும்.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது எம்9 என்ற பிரிமியம் எலெக்ட்ரிக் எம்பிவி காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த காருக்கான புக்கிங்கை இந்நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்நிலையில் இந்த கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 90 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Upcoming 3 Family EVs

இந்த காரில் 245 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக பவர்டெரைன் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குடும்பத்திற்கு ஏற்றதாக பிரிமியம் மற்றும் அல்டரா சொகுசு கேபின் வசதியுடன் உரவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் கியா கார்னிவெல் மற்றும் டொயோட்டா வில்ஃபயர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் எனன எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்கள் வரிசையாக இந்தியாவில் களம் இறங்கவுள்ளன. இந்த கார்கள் எல்லாம் மக்கள் விரும்பும் வகையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கார்களின் வருகைக்காக பலர் காத்திருக்கின்றனர். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 22, 2025, 23:00 [IST]
English summary
Upcoming 3 family evs launching soon in india from kia to mg
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X