குடும்பத்தோட 7 பேர் ஒரே கார்ல போகலாம்! இன்னும் கொஞ்ச நாள்ல இத்தனை கார் வருதா?

7 சீட்டர் கொண்ட எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. மக்கள் பலன் தராத வாகனங்களை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். பல்வேறு புதிய மாடல் கார்கள் இந்தியாவில் களமிறங்குகிறது. அதிக இட வசதி கூடுதல் வரிசை சீட்டுகள் மற்றும் அதிகமான பூட் வசதி காரணமாக இந்த ரக வாகனங்கள் அதிகமாக இந்தியாவில் விற்பனையாகிறது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்தடுத்து வர போகும் 7 சீட்டர் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் பட்டியலை காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ்

டாடா நிறுவனம் தனது சஃபாரி காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் 7 சீட்டர் காராக விற்பனைக்கு அறிமுகமாக கூறுகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் டிஜிபி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்த காரில் டீசல் இன்ஜின் மட்டுமே இருக்கும் நிலையில் இதன் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன் சிறப்பான வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த இன்ஜின் 170 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

Upcoming 7 Seater Car

மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் தனது 7 சீட்டர் காரின் அணிவகுப்பு விரிவுபடுத்தும் வகையில் புதிதாக எக்ஸ்இவி 7இ என்ற எலெக்ட்ரிக் காரையும் தனது எக்ஸ்யூவி 700 காரின் facebook வெர்ஷனையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன்படி எஸ்க்யூவி 700 கார் வரும் 2026 ஆம் ஆண்டு அறிமுகமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இது 59 கிலோ வாட் ஹவர் மற்றும் 79 கிலோ வாட் ஹவர் என இரண்டு விதமான பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது உள்ள எஸ்இவியின் 9இ மற்றும் பிஇ6 காரில் உள்ள அதே பேட்டரி பேக்டான இதிலும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எக்ஸ்யூவி 700 கார் 2026 ஆம் ஆண்டு எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மத்திய அறிமுகமாக வாய்ப்புள்ளது. இது பெயர் அப்டேட் செய்யப்பட்டு எஸ்யூவி 7 என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில் டிசைன் மாற்றங்கள் மற்றும் சில கூடுதல் அம்சங்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மாருதி

மாருதி நிறுவனம் தனது புதிதாக மூன்று வரிசை சீட் கொண்ட கிராண்ட் விட்டாரா காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி 4.5 மீட்டர் நீளம் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபோக ஒய்பிடி என்ற காம்பேக்ட் எம்பிவி காரை நிறுவனம் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இது எர்டிகாவை விட குறைவான விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் 1.2 லிட்டர் Z12e பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது.

Upcoming 7 Seater Car

ஃபோக்ஸ்வேகன்

வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைரோம் என்ற காரை இந்திய மார்க்கெட்டில் கொண்டு வர நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. இந்த கார் 2026ம் ஆண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த கார் டைகுன் காரின் 7 சீட்டர் வெர்ஷன் காராகவும் இந்த கார் எம்யூபி இ ஓ பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இதில் பிரபலமான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இதுபோக 7 சீட்டில் புதிய எஸ்யூவி காரையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இதில் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாருதி நிறுவனத்தின் 7 சீட்டர் கிராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷனை டொயோட்டில் ரீ பேட்ஜ் செய்து அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

Upcoming 7 Seater Car

எம் ஜி மோட்டார்

எம் ஜி நிறுவனம் எம்ஜி மெஜிஸ்டர் காரை 2026ம் ஆண்டு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இது ஒரு 7 சீட்டர் முழு சைஸ் காராகவும் இது குளோஸ்டர் மாடல் காரின் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட விஷயமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது 216 பிஎச்பி பவரையும் 479 என்எம் டார்க் திறனையம் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிஸான்

நிஸான் நிறுவனம் 7 சீட்டர் எம்பிவி செக்மெண்டில் 2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டிலேயே புதிய காரை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இது ரெனால்ட் டிரைபரை அடிப்படையாகக் கொண்டு cmfa பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த டீசல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது 72 பிஎச்பி பவரையும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் ஒரு புதிய 7 சீட்டர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்த காருக்கு போரல் என பெயர் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டஸ்டர் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக டஸ்டர் கார் இந்தியாவிற்குள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்த நிலையில் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அறிமுகமாக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்பத்துடன் பயணிக்க 7 சீட்டர் கார்கள் மிக ஏற்றதாக இருப்பதால் மக்கள் பலர் இந்த கார்களை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் 7 சிட்டார் மிகப்பெரிய விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை குறி வைத்து வாகனத்தை ஏற்ப நிறுவனங்கள் தற்போது பல்வேறு கார்களை தயாரித்து வருகின்றன. இந்த கார்களில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் கார் எது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 21, 2025, 9:15 [IST]
English summary
Upcoming 7 seater car suvs mpvs top brands in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X