எந்த காரை வாங்குவது, எந்த காரை விடுறதுனே தெரியல!! இந்த ஜூலையில் தரமான சம்பவம் காத்துக்கிட்டு இருக்கு!

ஜூலை மாதம் பிறந்துவிட்டது. 2025ஆம் வருடம் இப்போதுதான் துவங்கியதுபோல் இருந்தது. ஆனால், அதற்குள் பாதி வருடம் முடிந்து அடுத்த பாதி வருடம் துவங்கிவிட்டது. கடந்த மாதங்களை போலவே இந்த ஜூலை மாதத்திலும் ஏகப்பட்ட புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்பின் பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் புதியதாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் கணிசமாக அதிகரிக்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களை வாங்குவதை காட்டிலும் மார்க்கெட்டுக்கு புதியதாக வந்த லேட்டஸ்ட் காரை வாங்கவே பெரும்பாலானோர் விரும்பக்கூடும். ஏனெனில், அப்போதுதான் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய முடியும் அல்லவா...

இதனால், இப்போதில் இருந்தே கார் நிறுவனங்கள் தங்களது புதிய கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் புதியதாக ஐந்து கார்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இதில் சில கார்களின் அறிமுகங்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. சில கார்களின் அறிமுகங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டி உள்ளது.

upcoming car launches in july

எம்ஜி எம்9 (MG M9): இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம், அடுத்ததாக விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் ஒன்றை வருகிற ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதுதான், எம்9 ஆகும். 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்ட எம்9 எலக்ட்ரிக் காரில் 7 பேர் வரையில் அமர்ந்து பயணம் செய்யலாம்.

upcoming car launches in july

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி (Toyota Urban Cruiser EV): தற்சமயம் விற்பனையில் இருக்கும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் எலக்ட்ரிக் வெர்சன் இந்த ஜூலை மாதத்தில் வெளியீடு செய்யப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.20- 25 லட்சத்தில் விலையை கொண்டதாக இருக்கலாம் என கூறப்படும் அர்பன் க்ரூஸர் இவி எலக்ட்ரிக் காரின் விபரங்கள் மட்டுமே இந்த மாதத்தில் வெளியீடு செய்யப்படும் என்றும், அறிமுகம் வரும் மாதங்களில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

upcoming car launches in july

எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster): எம்ஜி நிறுவனம் உருவாக்கியதிலேயே வேகமாக இயங்கக்கூடியதாக விளங்கும் சைபர்ஸ்டர் இந்த ஜூலை மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைட்டர்-ஜெட் (Fighter Jet) போன்றதான கேபின் உடன், கத்திரிக்கோல் டிசைனில் இரு கதவுகள் மற்றும் இரு இருக்கைகளை மட்டுமே கொண்டதாக மிகவும் ஸ்டைலிஷாக உருவாக்கப்படும் இந்த எம்ஜி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரின் விலையும் அதற்கேற்ப அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

upcoming car launches in july

மஹிந்திரா எக்ஸ்இவி 4இ (Mahindra XEV 4e): இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் ஐந்து புதிய கார்களிலேயே மிகவும் எதிர்பார்ப்பில் இருப்பது இதுவாகும். எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் கொடுத்த வெற்றியை தொடர்ந்து, அதேபோன்றதான ஒரு எலக்ட்ரிக் காரை குறைந்த விலையில் எக்ஸ்இவி 4இ என்கிற பெயரில் மஹிந்திரா வருகிற ஜூலை 15ஆம் தேதி வெளியீடு செய்ய உள்ளது. எக்ஸ்இவி 4இ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்படலாம்.

upcoming car launches in july

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ் (Skoda Octavia RS): இந்தியாவில் ஆக்டேவியா கார்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படுவதும், பின்னர் சில மாதங்கள் பின் விற்பனை நிறுத்தப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக விளங்குகிறது. அதன்படி, இந்த ஜூலை மாதத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட ஆக்டேவியா ஆர்.எஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலையை ரூ.45- 50 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனையை அதிகரிக்கவும், வணிகத்தை பெருக்கவும் வருட இறுதி பண்டிகை காலங்கள் தான் சரியான நேரம். இதனாலேயே இந்த நேரத்தில் புதிய கார்களை அறிமுகம் செய்வதுடன், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். மேற்கூறப்பட்ட 5 கார்களில் சிலவற்றின் அறிமுகங்கள் தள்ளி போகலாம், அதேபோல் இந்த லிஸ்ட்டில் இல்லாத புதிய கார் ஏதேனும் கூட இந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 1, 2025, 12:51 [IST]
English summary
Upcoming car launches in india in this july 2025 check full list here
மேலும்... #upcoming launch #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X