11 புதிய கார்கள் வரிசையா வரப்போகுது! புதுசா கார் வாங்கும் முன் இதையும் யோசிங்க சார்!

நீங்கள் இந்தாண்டு புதிதாக கார் வாங்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு அவசரசம் இல்லை என்றால் வரிசையாக பல புதிய கார்கள் இன்னும் 3 மாதத்தில் களம் இறங்கவுள்ளது. என்னென் கார்கள் களம் இறங்குகிறது? அதன் அம்சங்கள் மற்றும் மற்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்

மஹிந்திர நிறுவனம் தனது 3 டோர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது உருவாக்குகிறது. இந்த கார் தற்போது விற்பனையாகும் காரில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் தான் வரப்போகிறது. இருந்தாலும் உட்பகுதியில் ஏகப்பட்ட மாற்றங்களை காண முடியும். முக்கியமாக இதில் தார் ராக்ஸ் காரில் உள்ளதை போன்ற ஸ்டியரிங் வீல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய டோர் பேட்கள், மற்றும் பிற அம்சங்களும் மாறுபடும். இன்ஜின் அதே ஆப்ஷனில் தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Upcoming Car Launches

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனும் வெளியாகவுள்ளது. இதில் சிறிய ஸ்டைல் மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம்பெறும். தற்போது உள்ள மாடலில் இருக்கம் அதே எம்ஹாக் 75 டீசல் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 75 பிஎச்பி பவர் மற்றும் 210 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் பின்பக்க வீல் டிரைவ்ஆப்ஷன் இதில்இடம் பெறும் ஆக்டோபர் மாதமே இந்த கார் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

மஹிந்திரா பொலிரோ நியோ

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ நியோ காரையும் அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டு வருகிறது. இது டியூவி 300 எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டு அப்டேட் செய்யப்படுகம் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக நீள வாக்கிலான கிரில், புதிய பம்பர்கள், மற்றும் சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்கள் எல்லாம் இடம்பெறும். ஒட்டு மொத்த டிசைன் மற்றும் பவர்டெரைன் மாற்றங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

Upcoming Car Launches

ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் வென்யூ காரை பொருத்தவரை இரண்டாம் தலைமுறை அப்டேட் செய்யப்படவுள்ளது இதில் முன்பக்கம் அக்ரஸிவான டிசைன், பெரிய கிரில், செவ்வக வடிவிலான எல்இடி ஹெட்லைட், புதிய பம்பர்கள், புதிய அலாய் வீல்கள், உள்ளே இரண்டு கனெக்டெட் ஸ்கிரீன்கள், இடம் பெறும் இன்ஜினில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தற்போது உள்ள மாடலில் இருக்கும் அதே இன்ஜின் தான் இதிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்

டாடா நிறுவனத்தின் பஞ்ச் பெட்ரோல் இன்ஜின் காரில் முக்கியமான ஃபேஸ்லிஃப்டை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் முகப்பு பகுதியில் தற்போது உள்ள பஞ்ச் காரில் உள்ள வடிவமைப்பு இடம்பெறும் இது போக புதிய அலாய் வீல்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் இடம்பெறும். இது போக பெரிய ஸ்கிரீன் உட்புறம் வரும் இது 10.25 இன்ச் டச் ஸ்கிரீனாக இருக்கும். இது போக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள், இடம்பெறும் இன்ஜின் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெறவே வாய்ப்புள்ளது.

Upcoming Car Launches

எம்ஜி மெஜஸ்டர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக எம்ஜி மெஜஸ்டர் காரை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் குளோஸ்டர் காருடன் சேர்த்து விற்பனவை செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் பெரிய கிரில், வெர்டிகல் எல்இடி ஹெட்லைட், ரக்கட் பம்பர், ஆங்குலர் டிஆர்எல், இந்த காரின் உட்புறம் புதிய 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், லெவல் 2 அடாஸ், பானரோமிக் சன் ரூஃப், 360 டிகிரி கேமரா, உள்ளிட்ட அம்சங்களுடன் தீபாவளிக்கு முன்னர் இந்த கார் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

டாடா சியாரா இவி

டாடா நிறுவனத்தின் சியாரா இவி காரைத விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இது ஒரு மிட்சைஸ் எஸ்யூவி காராக விற்பனைக்கு வருகிறது. இந்த கார் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், மஹிந்திரா பிஇ6, எம்ஜி விண்ட்ஸர் இவி உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.இதில் மஸ்குலரான டிசைன், முன்பக்கம் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி பெட்ரோல்

டாடா நிறுவனம் தனது ஹாரியர் என்ற மிட்சைஸ் எஸ்யூவி கார் மற்றும் சஃபாரி ஆகிய கார்களை அப்டேட் செயஅது வெளியட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் ஏற்கனேவ இந்தாண்டு துவக்கத்தில் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் இடம்பெற்றது. விரைவில் இந்த கார்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மாருதி இ-விட்டாரா

மாருதி நிறுவனம் தனது இ-விட்டாரா என்ற தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்த தீபாவளியை ஒட்டி களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இ்த காரில் 2 விதமான பேட்டரி பேக்குகள் உள்ளன. 48.8kWh மற்றும் 61.1kwh பேட்டரிபேக்குகள் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கி.மீ வரை ரேஞ்ச் தரும் திறன் கொண்டது. இதில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த கார் தற்போது விற்பனையாகி வரும் எக்ஸ்யூவி 400காருக்கு மாற்றாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 2 விதமான பேட்டரி ஆப்ஷவன்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடுத்த 3 மாதத்தில் வரிசையாக பல கார்கள் களம் இறங்கவுள்ளன. இந்த கார்கள் எல்லாம் மார்கெட்டில் சிறப்பான வரவேற்ப்பை பெற்ற கார்களாக உள்ளன. பலர் இந்த கார்களை நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது கார் விலைகுறையும் போது

More from DriveSpark

Article Published On: Sunday, September 28, 2025, 15:00 [IST]
English summary
Upcoming car launches until december 2025 full details
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X