நாடே எதிர்பார்த்த காரெல்லாம் ஆகஸ்ட்ல வருது! இப்பவே புக் பண்ண ரெடியாகுங்க!
இந்தியாவில் தற்போது ஜூலை மாதம் முடிவுக்கு வந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கப்போகிறது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் புதிய கார்களை களம் இறக்க தயாராகி வருகின்றனர். அதன்படி வரும் ஆகஸ்ட்மாதம் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள கார் குறித்த விரவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வால்வோ எக்ஸ்சி -60
வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி 60 காரின் 2025ம் ஆண்டிற்கான வெர்ஷனை வரும் 1ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் ரூ70 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கபடுகிறது. தற்போது விற்பனையாகி வரும் காரிலிருந்து நவீனமான அப்டேட்களுடன் இந்த கார் அறிமுகமாகி மார்கெட்டில் தனது இருப்பதை நிலை நிறுத்திக்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மெர்சிடீஸ்- ஏஎம்ஜி சிஎல்இ 53 4-மேட்டிக்
மெர்சிடீஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஏஎம்ஜி சிஎல்இ 53 4-மேட்டிக் என்ற காரை வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் 3.0 லிட்டர் ட்வின் டர்போ இன்லைன் -6 சிலிண்டர் இன்ஜின் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ2 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா கான்செட்
வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மஹிந்திரா நிறுவனம் ஒரு முக்கியமான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளில் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய கான்செப்ட் கார்களை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி விஷன் எஸ், விஷன் எஸ்எக்ஸ்டி, விஷன் டி, விஷன் எக்ஸ் ஆகிய கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்த கார்கள் தான் மஹிந்திராவின் அடுத்தகட்ட எலெக்ட்ரிக் கார்களாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வின்ஃபாஸ்ட்
வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அதுவும் தூத்துக்குடியில் ஆலை அமைத்து தனது வாகனங்களை தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளது. இந்நிறுவனம் தனது முதல் வாகனமாக விஎஃப் 7 வாகனத்தை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் ரூ50 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் தனது காரை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த கார் விரைவில் இந்தியா சாலைகளில் ஓடவுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் மொலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. குறிப்பிடத்தக்கது.
ரெனால்ட் கைகர்
ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் தான் தனது டிரைஃபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி தனது கைகர் காரின் அப்டேட்டட் வெர்ஷனையும் வெளியிட திட்டமிட்டமிட்டுள்ளது. இந்த கார் டிரைபர் கார் போல பல அப்டேட்களை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய ரக கார்களின் படையெடுப்பு அதிகமாக இருக்கும். பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் வரிசையாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த பட்டியலில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








