பணத்தை ரெடி பண்ணுங்க, இந்த காரெல்லாம் அடுத்த மாசமே வருது!

இந்த ஜூன் மாதம் தற்போது நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஜூலை மாதத்தில் அறிமுகமாக பல கார்கள் அணி வகுத்து நிற்கின்றன. இப்படியாக வரும் ஜூலை மாதம் அறிமுகத்திற்கு தயாராக இருக்கும் கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கியா கேரன்ஸ் இவி: இந்த பட்டியலில் முதலில் இரப்பது கியா கேன்ஸ் இவி தான் கார் தான். இந்த கார் இந்திய சாலைகளில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பு அதன் பெட்ரோல் மாடலின் வடிவமைப்பிலேயே இருகு்கிற. இந்த காரில் புதிய பேட்டரி பேக் இடம் பெறலாம். 2-3 பேட்டரி ஆப்ஷன்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

Upcoming Cars in July 2025

எம்ஜி எம்9: எம்ஜி நிறுவனம் புதிய எம்ஜி எம்9 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்றதாக உள்ளது. இந்த கார் பிரிமியம் செக்மெண்ட் காராக இருக்கிறது. இது எம்ஜி நிறுவனத்தின் புதிய செலெக்ட் டீலர்ஷிப்களில் மட்டுமே கிடைக்கும். இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. கேப்டன் சீட்டுகள், மிடில் வரிசை சீட்டுகள், வென்டிலேட்டட் சீட்டுகள் ஹீட்டிங் மசாஜ் அம்சங்கள் ஆகியன உள்ளன.

பிஎம்டபிள்யூ 2 சிரீஸ்: பிஎம்டபிள்யூ சொகு செக்மெண்டில் 2 சிரீஸ் கார் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வரப்போகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றம் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் என்ட்ரி லெவல் சொகுசு செடான் காராக விற்பனைக்கு வருகிறது. இந்த கார் ஜூலை மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகமாகலாம்.

Upcoming Cars in July 2025

ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட்: ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கார் இன்ஜின் மாற்றங்கள் இல்லாமல் சில வெளிப்புற மாற்றங்கள் புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட்: ரெனால்ட் நிறுவனம் டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Upcoming Cars in July 2025

இந்த பட்டியலில் உள்ள கார்கள் எல்லாம் ஜூலை மாதம் எதிர்பார்க்கப்படும் அறிமுகம் இருக்கும் கார்கள் தான் அதில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இவை பெரும்பாலும் எதிர்பார்க்கப்படும் அறிமுகம் கொண்ட கார்கள் தான். இந்த கார்கள் நிச்சயம் மக்கள் கவனத்தை ஈர்க்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜூலை மாதம் இத்தனை கார்கள் வரவுள்ள நிலையில் இந்த காலகடத்தில் இந்த காரை வாங்க பலர் காத்திருப்பதால் இந்த கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இதில் பெரும்பாலும் எஸ்யூவி கார்கள் எதிர்காலத்தில் இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 29, 2025, 21:29 [IST]
English summary
Upcoming cars in july 2025 top suvs and models launching soon
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X