அடிமட்ட விலையில் அதிக மைலேஜ் தரும் காரெல்லாம் கூட வருது! செப்டம்பர் மாசம் ரெடியா இருங்க!

ஆகஸ்ட் மாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில் செப்டம்பர் மாதம் ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான மாதமாக இருக்கிறது. பொதுவாக தீபாவளிக்கு கார் வாங்க பலர் முடிவு செய்வார்கள். அவர்களை ஈர்க்க வழக்கமாக செப்டம்பர் மாதம் புதிய கார்களின் அறிமுகம் அதிகமாக இருக்கும். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 6 கார்கள் புதிதாக அறிமுகமாகவுள்ளது. இந்த பட்டியலை இங்கே விரிவான காணலாம் வாருங்கள்.

இந்த செப்டம்பர் மாதம் இந்தியாவையே புரட்டி போடும் அளவிற்க மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படம் கார்கள் எல்லாம் களம் இறங்குகிறது. அதன்படி இந்தியாவில் முதன் முறையாக காலடி தடத்தை எடுத்து வைக்கும் விண்ஃபாஸ்ட் நிறுவனம் தனது விஎஃப் 6 விஎஃப் 7 ஆகிய கார்களை களம் இறக்குகிறது. இது போக மாருதியின் புதிய மிட் சைஸ் எஸ்யூவியான எஸ்குடோ, மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட், சிட்ரோன் பசால்ட் எக்ஸ், வால்வோ இஎக்ஸ் 30 இவி ஆகிய கார்கள் களம் இறங்குகிறது.

Upcoming Cars in September 2025

விண்ஃபாஸ்ட் விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி தனது முதல் அறிமுகத்தை திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 ஆகிய கார்களை களம் இறக்குகிறது. இதில் விஎஃப் 6 கார் 59.6 கிலோ வாட் ஹவர் பேட்டரியை கொண்டுள்ளது. இது 480 கி.மீ ரேஞ்சை தரும். விஎஃப் 7 காரை பொருத்தவரை 70.8 கிலோ வாட் ஹவர் பேட்டரியை கொண்டுள்ளது. இது 450 கி.மீ ரேஞ்ச் தரும். இந்த கார்கள் எல்லாம் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

மாருதி எஸ்குடோ

மாருதி நிறுவனம் புதிய மிட் சைஸ் எஸ்யூவி காரான எஸ்குடோ காரை வரும் செப்டம் 3ம் தேதி விற்பனைக்ககாக கொண்டு வருகிறது. இது கிராண்ட் விட்டாரா காரை விட பெரிய காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மைல்டு மற்றும் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. இதனால் இந்த கார் அதிக மைலேஜ் தரும் களம் இறங்குகிறது. அரேனா டீலர் ஷிப் வழியாக இ்நத கார் களம் இறங்குகிறது. ரூ10 லட்சம் என்ற விலையில் இந்த கார் களம் இறங்குகிறது.

Upcoming Cars in September 2025

மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்

மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான தார் 3 டோர் வெர்ஷன் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை செப்டம்பர் முதல் வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த காரின் வெளிப்புறத்தில் மட்டும் அப்டேட் இல்லாமல் உட்பகுதியில் அப்டேட் வருகிறது. இன்ஜின் ஆப்ஷன்களில் அப்டேட் எதுவும் இல்லை.

சிட்ரோன் பசால்ட் எக்ஸ்

சிட்ரோன் நிறுவனம் கடந்த 22ம் தேதியே தனது பசால்ட் எக்ஸ் காருக்கான முன்பதிவை துவங்கிவிட்டது. இந்த காரை வெறும் ரூ21,000 முன்பணம் செலுத்தி காரை வாங்கிக்கொள்ளலாம். இந்த கார் செப்டம்பர் மாத மத்தியில் விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் புதிய கலர் மற்றும் அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் அதே 1.2 லி டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Upcoming Cars in September 2025

வால்வோ இஎக்ஸ் 30

இந்தியாவில் வால்வோ நிறுவனம் குறைந்த விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை களம் இறக்க தயாராகி வருகிறது.இந்த காருக்கு இஎக்ஸ் 30 என பெயர் வைத்துள்ளது. இந்த கார் ரூ50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 69 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது. இது முழு சார்ஜில் 480 கி.மீ ரேஞ்ச் தரும். இந்த காரின் பேட்டரியை 150 கிலோ வாட்
ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் வெறும் 25 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ் ஏறிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தீபாவளியை குறிவைத்து பல்வேறு வாகனங்கள் களம் இறங்குகிறது. இந்த நிலையில் மக்கள் பலர் இந்த வாகனங்களை வாங்குவார்கள் என்பதால் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே களம் இறங்குகிறது.இந்தாண்டு தீபாவளி எதிர்பார்த்த அளவிற்கு சூடுபிடிக்காது, தீபாவளிக்கு பிறகு ஜிஎஸ்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் தீபாவளிக்கு பிறகு தான் வாங்கும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 31, 2025, 7:26 [IST]
English summary
Upcoming cars in september 2025 maruti suzuki escudo 6 launches
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X