ஒட்டுமொத்த நாடும் இதுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கு! மஹிந்திரா கார் எதுவும் லிஸ்ட்டில் இல்லை!
இந்தியா, உலகின் மிக பெரும் கார் சந்தை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் பரந்து விரிந்த இந்திய சந்தையில் தங்களது கார்களை விற்பனை செய்ய மிகவும் விரும்புகின்றன. ஆனால், எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக வேகமாக வளர்ச்சி காணாமல், இந்தியாவில் மெதுவாகவே அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்திய மார்க்கெட்டில் அடுத்த சில மாதங்களில் புதியதாக பல எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள் முக்கியமான 6 எலக்ட்ரிக் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கியா கிளாவிஸ் இவி (Kia Clavis EV): கியா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட கார், கேரன்ஸ் கிளாவிஸ் ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருந்த கேரன்ஸ் (Carens) காரின் புதிய அப்டேட் வெர்சனாகவும், விலையுயர்ந்த வெர்சனாகவும் கேரன்ஸ் கிளாவிஸ் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. கேரன்ஸ் கிளாவிஸ் காரின் எலக்ட்ரிக் வெர்சனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்திலும் கியா உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV) எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக கொண்டுவரப்படும் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் காரில் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில், அளவில் பெரியதான பேட்டரி உடன் சிங்கிள்-முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 450கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக கிளாவிஸ் இவி இருக்கும் என கூறப்படுகிறது.
எம்ஜி எம்9 (MG M9): எம்ஜி மோட்டார் நிறுவனம் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்ய போகும் விலையுயர்ந்த கார், எம்9 ஆகும். அளவில் பெரியதான பிரம்மாண்டமான காராக விளங்குவது மட்டுமின்றி, எம்9 ஒரு எலக்ட்ரிக் கார் ஆகும். மேலே கண்ட கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் மிக விரைவில் எம்ஜி எம்9 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், எம்ஜி எம்9 எலக்ட்ரிக் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரப்படும் பணிகள் கூட துவங்கப்பட்டு விட்டன. இதனால், இன்னும் சில வாரங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் எம்9 எலக்ட்ரிக் காரில் அளவில் பெரியதான 90kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 430கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e Vitara): இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அதன் முதல் எலக்ட்ரிக் காரை வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய எல்லா விதங்களிலும் தயாராகி வருகிறது. மாருதி சுஸுகியின் இந்த முதல் எலக்ட்ரிக் கார் ஆனது தற்சமயம் விற்பனையில் இருக்கும் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரின் எலக்ட்ரிக் வெர்சன் ஆகும்.

கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட இ விட்டாரா எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ரேஞ்சை அதிகப்பட்சமாக 500கிமீ வரையில் எதிர்பார்க்கலாம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் பிஇவி (Toyota Urban Cruiser BEV): இந்த 2025ஆம் வருடத்தின் இரண்டாம் பாதியில் டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள எலக்ட்ரிக் கார், அர்பன் க்ரூஸர் பிஇவி ஆகும். இந்தியாவில் டொயோட்டாவின் முதல் எலக்ட்ரிக் காராக கொண்டுவரப்படும் இது இவி என அழைக்கப்படாமல், பிஇவி என அழைக்கப்பட உள்ளது. இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

மாருதி சுஸுகி இ-விட்டார எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே அர்பன் க்ரூஸர் பிஇவி அறிமுகம் செய்யப்படும். ஏனெனில், இ-விட்டாராவில் வழங்கப்பட உள்ள பெரும்பாலான மெக்கானிக்கல் பாகங்கள் தான் அர்பன் க்ரூஸர் பிஇவி காரில் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் கண்டுப்பிடிக்க முடியாத வண்ணம், இந்த இரு எலக்ட்ரிக் கார்களும் வெவ்வேறான தோற்றத்தில் இருக்கும்.
டாடா ஹெரியர் இவி (Tata Harrier EV): கர்வ் இவி எலக்ட்ரிக் காருக்கு அடுத்து சிறிய இடைவெளிக்கு பிறகு டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ள புதிய எலக்ட்ரிக் கார், ஹெரியர் இவி ஆகும். இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் காரில் சிங்கிள்-மோட்டார் மற்றும் ட்யூயல்-மோட்டார் என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களை டாடா மோட்டார்ஸ் வழங்க உள்ளதை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியின் போதே பார்த்திருந்தோம்.

இதில் டபுள் மோட்டார் வெர்சனில் ஆல்-வீல்-டிரைவ் செட்-அப் கிடைக்க உள்ளது. அதேபோல், இரு எலக்ட்ரிக் மோட்டார்களின் உதவியுடன் அதிகப்பட்சமாக 500கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு இயங்கக்கூடியதாக ஹெரியர் இவி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டபுள் மோட்டார் வெர்சனில் அதிகப்பட்சமாக 500 என்.எம் வரையிலான டார்க் திறனை காரில் பெறலாம்.
எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster): எம்9 எலக்ட்ரிக் காருக்கு அடுத்து இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்யும் மற்றொரு எலக்ட்ரிக் கார் இதுவாகும். எம்9 எலக்ட்ரிக் கார் பிரம்மாண்டமானதாக மற்றும் விலையுயர்ந்ததாக இருக்கும் என்றால், சைபர்ஸ்டர் ஆனது அதனை காட்டிலும் விலைமிக்கதாக எம்ஜியின் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக கொண்டுவரப்பட உள்ளது.

டபுள் மோட்டார் செட்-அப் உடன் இந்த எலக்ட்ரிக் காரின் ஜிடி வெர்சன் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த ஸ்போர்ட்ஸ் காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 208கிமீ ஆகும். இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 443கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதுதான் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் பெரியதாகி வருகிறது. ஆகையால், மேற்கூறப்பட்ட மற்ற எலக்ட்ரிக் கார்களுக்கு ஓரளவிற்கு ஆவது வரவேற்பு கிடைக்கும் என்றாலும், எம்ஜி எம்9 மற்றும் சைபர்ஸ்டர் ஜிடி போன்ற விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications









