ஹூண்டாய்க்கு சங்கு ஊத போகும் மாருதியின் விலை குறைவான கார்! ஒரு முடிவோடதான் இருக்காங்க!
இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களுக்கான 'டிமாண்ட்' அதிகமாக இருக்கிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்கள் களமிறங்கி கொண்டே உள்ளன. குறிப்பாக இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்த செக்மெண்ட்டை பெரிதாக நம்புகிறது. இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) விற்பனையில் உள்ளது. இந்த வரிசையில் புதிதாக மேலும் ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு களமிறக்குவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹரியானா (Haryana) மாநிலம் குர்கானில் (Gurgaon) வெகு சமீபத்தில் இந்த கார் கேமரா கண்களில் சிக்கியது. அங்குதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கார் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாராவின் நீளத்தில்தான், இந்த புதிய காரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கட்டமைக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில், இந்த புதிய காரும் கட்டமைக்கப்படலாம். இருப்பினும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாராவிடம் இருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி காட்டும் வகையில் தனித்துவமான டிசைன் அம்சங்களை இந்த புதிய கார் கொண்டிருக்கும்.

அனேகமாக மாருதி சுஸுகி இ விட்டாராவின் (Maruti Suzuki e Vitara) ஒரு சில டிசைன் அம்சங்களை நாம் இந்த காரில் எதிர்பார்க்கலாம். இ விட்டாராதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில மாதங்களில் மாருதி சுஸுகி இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் சமீப காலமாக களமிறக்கும் பெரும்பாலான புத்தம் புதிய கார்கள், அதன் பிரீமியம் நெக்ஸா டீலர்ஷிப்கள் (NEXA Dealerships) மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார், அதன் அரேனா ஷோரூம்கள் (Arena Dealerships) மூலமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புத்தம் புதிய காரில், 1.5 லிட்டர் 4 சிலிண்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய கார்களில் இந்த இன்ஜின் ஆப்ஷன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பாதுகாப்பிற்காக அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை (Price) அனேகமாக 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








