இந்த 4 கார்கள் இந்தியாவையே புரட்டி போடப்போகுது! அப்படி இதுல என்னதான் இருக்குது?

மஹிந்திரா, டாடா, ரெனால்ட், நிஸான் ஆகிய நிறுவனம் மிட்சைஸ் செக்மெண்டில் கம்பஷன் இன்ஜின் கார்களை அடுத்த 3-4 மாதங்களில் வெளியிட தயாராகி வருகின்றன. இந்த கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்கள் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மிட்சைஸ் எஸளுஅயூவி செக்மெண்ட் இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனவை செய்யும் செக்மெண்டாக இருக்கிறது.இந்த செக்மெண்டில் அடுத்த 3-4 மாதங்களில் ஏகப்பட்ட கார்கள் விற்பனைக்கு வருகிறது. மஹிந்திரா, டாடா, ரெனால்ட், நிஸான் ஆகிய நிறுவனங்களின் கார்கள் இந்தியாவில் இந்த செக்மெண்டை குறி வைத்து கார்களை களம் இறக்குகிறது.

Upcoming Mid Size SUVs

1. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட்

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து வரும் 2026ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதில் புதிய கேபில் லேஅவுட், 3 டிஸ்பிளே கொண்ட ஸ்கிரீன்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ் போர்டு, சென்டர் கன்சோல், அப்டேட் செய்யப்பட்ட உட்புற வடிவமைப்பு மெட்டிரியல் உள்ளிட்ட அப்டேட்கள் வரவுள்ளது. இன்ஜின் விஷயங்களில் மாற்றம் இல்லை. அதே 2.2லி டீசல் மற்றம் 2.0 லி டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொருத்தவரை அதே மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வருகிறது.

2. நிஸான் டெக்டான்

நிஸான் நிறுவனம் மிட்சைஸ் எஸ்யூவி மார்கெட்டில் டெக்டான் என்ற காரை களம் இறக்க தயாராகி வருகுிறது.இந்த கார் 2026ம் ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் வெளியாகும் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பு சர்வதேச அரங்கில் இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் பேட்ரோல் என்ற காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Upcoming Mid Size SUVs

3. ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் நிறவனம்தனது டஸ்டர் காரை புதிய வடிவமைப்புடன் தயாரித்துள்ளது. இந்த கார் வரும் ஜனவரி 26ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த கார் சிஎம்எஃப்-பி கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளுது. இந்த கார் முழுமையாக லோக்கலில் உருவாக்கப்படுகிறது. இதில் நவீன அம்சங்கள், தொழிற்நுட்பங்கள் கொண்ட வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2 வகையான பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. டாடா சியாரா

டாடா நிறுவனம் சியாரா காரை மீண்டும் கொண்டு வருகிறது. இந்த காரில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நேச்சுரலி அஸ்பயர்டு மற்றம் டர்போ ஆகிய 2 வெர்ஷன்கள் வரும் என எதிர்பார்க்கலாம். இ்நத கார் 168 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது போக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் நவம்பர் 25ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

Upcoming Mid Size SUVs

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிட் சைஸ் செக்மெண்ட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மெண்டில் ஏகப்பட்ட மக்கள் கார்களை வாங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதி மற்றம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த செக்மெண்டையே மாற்றியமைக்கும் வகையில் பல கார்கள் களம் இறங்குகிறது. மார்கெட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாரப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 20, 2025, 11:45 [IST]
English summary
Upcoming mid size suvs new midsize ice suvs mahindra tata
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X