வெறும் ரூ10 லட்சம் இருந்தா போதும்! 6 புதிய கார்கள் வருகிறது!

இந்தியாவில் வாகன சந்தையில் காம்பேக்ட் செக்மெண்டில் போட்டி அதிகமாகிக்கொண்டே செல்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஹைபிரிட், பாதுகாப்பு அம்சங்கள், உள்ளிட்ட பல விஷயங்களை புகுத்தி வாகனங்களை அப்டேட் செய்கின்றனர். அப்படியாக ரூ10 லட்சத்திற்குள்ளான பட்ஜெட்டில் இந்தியாவிற்கு வரவுள்ள 6 கார்கள் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம்.

மாருதி ஃபிராங்க்ஸ் ஹைபிரிட்: மாருதி நிறுவனம் தனது ஃபிராங்க்ஸ் காரின் ஹைபிரிட் வெர்ஷனை விரைவில் அறிமுகப்படுத்தப்போகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் இசட் 12இ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மைலேஜை அதிகரித்து மாசுவை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Upcoming New Cars under 10 lakhs

டாடா பஞ்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் : டாடா நிறுவனம் தனது பஞ்ச் இவி காரை விரைவில் அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படை டிசைனில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருகு்கிறது. முக்கியமாக வெளிப்புறங்களில் ஒரு சில அப்டேட்கள் இடம் பெறும் எனவும், வாகனத்தில் உள்ள அம்சங்களில் சில அப்டேட்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ: ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரின் புதிய தலைமுறை காரை வரும் பண்டிகை காலத்தில் இந்தியாவின் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதில் வெளிப்புறம், உட்புறம், கேபின் ஸ்டைல் என எல்லாம் மாற்றம் பெறஉள்ளது. இந்த காரில் உள்ள இன்ஜின் அதே ஆப்ஷன் கொண்ட பெட்ரோல் நேச்சுரலி அஸ்பயர்டு, டர்போ பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

Upcoming New Cars under 10 lakhs

மஹிந்திரா 3எக்ஸ்ஓ இவி: மஹிந்திரா நிறுவனம் தனது 3எக்ஸ்ஓ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. எக்ஸ்யூவி 400 காருக்கும் கீழாக இது பொசிஷ்ன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் தற்போது அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. டெக்னிக்கல் தகவல்களை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் : ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் காரை விரைவில் அப்டேட் செய்து வெளியிடவுள்ளது. இந்த சாதனை அந்நிறுவனம் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்து வருகுிறது. இந்த காரின் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்னென்ன் மாற்றங்கள் வரப்போகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் இன்ஜின் அம்சங்களில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

Upcoming New Cars under 10 lakhs

நிஸான் காம்பேக்ட் எம்பிவி: குடும்பத்துடன் பயணிக்க நிஸான் நிறுவனம் ரெனால்ட் டிரைபர் காரை அடிப்படையாக கொண்ட புதிய எம்பிவி காரை 2026ம் ஆண்டு முதல் பாதியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இதன் பெயர் குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று முதல் தலைமுறை கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்நிலையில் மேலே உள்ள கார்கள் அடுத்த 6 முதல் 12 மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரப்போகிறது. இதில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்ட் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 28, 2025, 23:15 [IST]
English summary
Upcoming new cars under 10 lakhs check top 6 models to watch
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X