எஸ்யூவி வசம் உள்ள இந்தியர்களை செடான் கார்கள் வளச்சு போட போகுது.. 4 அட்டகாசமான செடான்களின் வருகை உறுதியானது..

சென்ற ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் இந்தியாவில் புதுமுக (New) மற்றும் புதுப்பிக்கப்பட்ட (Facelift) கார் மாடல்கள் சில விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. அந்தவகையில், இப்போதே புதிய செடான் ரக கார் (Sedan Car)-கள் சிலவற்றின் இந்தியா வருகை உறுதியாகி இருக்கின்றது. இந்திய கார் சந்தை எஸ்யூவி (SUV) கார்களுக்கானதாக மாறி வெகுகாலம் ஆகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மீண்டும் சந்தையை தன்பக்கம் வளைத்துப் போடும் விதமாக செடான் ரக கார்கள் இந்த ஆண்டில் மிகப் பெரிய எண்ணிக்கையில் படையெடுக்க இருக்கின்றன.

ஆனால், இந்த பதிவில் வருகை உறுதி செய்யப்பட்டு இருக்கும் நான்கு செடான் ரக கார் மாடல்கள் பற்றிய தகவலை வழங்கி இருக்கின்றோம். அவை எவை? அவற்றின் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Upcoming new sedans in india

ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb): இந்தியாவில் விரைவிலேயே விற்பனைக்கு வர இருக்கும் செடான் ரக கார்களின் லிஸ்ட்டில் முதல் இடத்தை இந்த கார் மாடலே பிடித்திருக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் டீசல் ஆப்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், இந்த கார் மாடல் இந்தியாவை மீண்டும் செடான் கார் டிரெண்டிற்கும் மட்டுமல்ல டீசல் கார்கள் டிரெண்டிற்கும் அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எப்படி இந்தியா தற்போது எஸ்யூவி கார்களுக்கான சந்தையாக மாறி இருக்கின்றோத, அதேபோல், பெட்ரோல் கார்களுக்கான சந்தையாகவும் நம் நாடு மாறி இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே ஸ்கோடா நிறுவனம் சூப்பர்ப் கார் மாடலில் டீசர் கார் பிரியர்களை கருத்தில் கொண்டு டீசல் ஆப்ஷனை வழங்க முன் வந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. 2.0 லிட்டர் டிடிஐ டர்போ டீசல் மோட்டார் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

மேலும் இந்த மோட்டார் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதும் தற்போது தெரிய வந்து இருக்கின்றது. இதற்கு பின்னரே பெட்ரோல் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படுமாம். ஸ்கோடா நிறுவனம் இந்த காரின் இந்திய வருகையை உறுதிப்படுத்தம் விதமாக சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது.

நான்காம் தலைமுறை சூப்பர்ப் கார் மாடலையே அது காட்சிப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. இது இந்தியர்களின் கவனத்தை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த காரை இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். சிபியூ வாயிலாகவே இதை அவர்கள் இந்தியாவில் விற்பனைச் செய்ய இருக்கின்றனர்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (Skoda Octavia RS): இந்தியாவின் செடான் கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஆக்டேவியா ஆர்எஸ் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடலில் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே ஆக்டேவியா ஆர்எஸ் கார் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் அதிகம் பிரீமியம் அம்சங்களுக்காக இந்த கார் நல்ல வரவேற்பை மார்க்கெட்டில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவும் இந்தியாவில் சிபியூ வாயிலாகவே விற்பனைக்கு வர இருக்கின்றது. அதேவேளையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்த காரை ஸ்கோடா விற்பனைச் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.

ஸ்கோடா ஸ்லேவியா ஃபேஸ்லிஃப்ட் (Skoda Slavia Facelift): ஸ்கோடா நிறுவனம் இந்தியாவை முழுமையாக செடான் கார்களுக்கான சந்தையாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதை வெளிக்காட்டும் விதமாக இந்த கார் மாடல் இருக்கின்றது. இந்த ஆண்டிற்கு மட்டும் இது மூன்று செடான் கார்களை இந்தியாவிற்காக ஒதுக்கி இருக்கின்றது.

மூன்றாவது மாடலே ஸ்லேவியா ஃபேஸ்லிஃப்ட் ஆகும். இப்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் அதிக அழகு மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய ஸ்லேவியாவாகவே இது விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த காரை நடப்பாண்டின் முதல் அரையாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் ஃபேஸ்லிஃப்ட் (Volkswagen Virtus Facelift): இது ஓர் மிட்-சைஸ் செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த காரை 2025 இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். அடாஸ் போன்ற தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. புதிய மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களைத் தாங்கிய காராகவும் இந்த வாகனம் சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கே நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டிரெண்டை செடான் கார் பக்கம் வளைத்துப் போடும் விதமாக சில நிறுவனங்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் செடான் ரக கார்களை விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2025, 19:00 [IST]
English summary
Upcoming new sedans launching in india in 2025 key details
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+