மாருதி ஈரக்குலையை நடுங்க வைத்த புதிய 7 சீட்டர் கார்! விலை இவ்ளோதானா! இன்னும் 3 நாள்ல மார்க்கெட் அதிர போகுது!
ரெனால்ட் (Renault) மற்றும் நிஸான் (Nissan) ஆகிய 2 நிறுவனங்களும் மிக நீண்ட காலமாகவே கூட்டணி அமைத்து இயங்கி வருகின்றன. இந்த 2 நிறுவனங்களும், இந்திய சந்தையில் தங்கள் கார் விற்பனையை வெகுவாக உயர்த்த வேண்டும் என விரும்புகின்றன. இதன் ஒரு பகுதியாக அடுத்த 6 மாதங்களுக்குள், 3 புத்தம் புதிய கார்களை இந்த 2 நிறுவனங்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
3வது தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Third-generation Renault Duster): இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்த ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இருப்பினும் கூடிய விரைவில் ரெனால்ட் டஸ்டர் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது, ரெனால்ட் டஸ்டர் காரின், 3வது தலைமுறை மாடல் ஆகும். இந்தியாவின் குடியரசு தினமான (Republic Day) வரும் ஜனவரி 26ம் தேதி 3வது தலைமுறை ரெனால்ட் டஸ்டர் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதன் பின் பிப்ரவரி மாதத்தில் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3வது தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) இது கொண்டிருக்கும்.

நிஸான் டெக்டான் (Nissan Tekton): 3வது தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரைதான், இந்திய சந்தையில் நிஸான் நிறுவனம் டெக்டான் என்ற பெயரில் விற்பனை செய்யவுள்ளது. 3வது தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காருக்கும், நிஸான் டெக்டான் காருக்கும் இடையே டிசைனில் நிறைய மாற்றங்கள் இருக்கும். ஆனால் இந்த 2 கார்களின் இன்ஜின் ஆப்ஷன்களும் ஒன்றாகவே இருக்கும்.
அதேபோல் இந்த 2 கார்களும் ஏராளமான வசதிகளையும் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக நிஸான் டெக்டான் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஸான் 7 சீட்டர் எம்பிவி (Nissan 7-Seater MPV): நிஸான் நிறுவனம் வரும் டிசம்பர் 18ம் தேதி புதிய 7 சீட்டர் எம்பிவி கார் ஒன்றை பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ளது. அனேகமாக ஜனவரி 2வது வாரத்திற்குள்ளாக நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய 7 சீட்டர் எம்பிவி கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய 7 சீட்டர் எம்பிவி காரின் ஆரம்ப விலை அனேகமாக 5.75-6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு (Maruti Suzuki Ertiga) இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது.
இது ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் ஆகும். எனவே ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் மேற்குறிப்பிட்ட 3 புதிய கார்களின் வருகைக்கு பின், ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








