மாருதி ஈரக்குலையை நடுங்க வைத்த புதிய கார்! வெளியான புதிய தகவலை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த குஷாக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது. அனேகமாக இன்னும் ஒரு சில மாதங்களில் ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் ஒன்று, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

Skoda Kushaq

ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பின் பகுதியில் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் வழங்கப்படலாம் என்பதுதான் அந்த புதிய தகவல் ஆகும். இது நடக்கும்பட்சத்தில், இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், பின் பகுதியில் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகளை கொண்டுள்ள முதல் கார் என்ற பெருமையை ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் பெறும்.

இதுதவிர லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), பனரோமிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளும் (Features), ஸ்கோடா குஷாக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Maruti Suzuki Grand Vitara

அதேபோல் டிசைனிலும் நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை, ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

அத்துடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கும் ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா குஷாக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.61 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 18.43 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை ஸ்கோடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் காரணத்தால், புதிய மாடலின் விலை சற்று உயர்த்தப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 9, 2025, 23:59 [IST]
English summary
Upcoming skoda kushaq facelift new details out
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+