கார் மார்க்கெட்டை சம்பவம் பண்ண 10 புதிய கார்கள் ரெடி! 10 லட்ச ரூபாயை விட கம்மியான விலையில்!

இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் சந்தை, 2027ஆம் ஆண்டுக்குள் ஒரு பெரும் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் (Hyundai), மஹிந்திரா (Mahindra), கியா (Kia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) போன்ற முன்னணி கார் நிறுவனங்கள், பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் என்ஜின்கள் கொண்ட புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளதால், போட்டி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், அடுத்ததாக ரூ.10 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரவிருக்கும் 10 புதிய காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்களை இங்கே காணலாம்.

1. ஹூண்டாய் காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி: ஹூண்டாயின் புதிய காம்பாக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்று உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளது. இது க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு கீழே நிலைநிறுத்தப்படும். இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வரும் இந்த எலெக்ட்ரிக் கார், டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் உடன் போட்டியிடும். சர்வதேச ஹூண்டாய் இன்ஸ்டர் காரின் வடிவமைப்பை ஒத்ததாக, 2026ஆம் ஆண்டில் இந்த ஹூண்டாய் எஸ்யூவி கார் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

upcoming sub-4 meter suv car under price 10 lakhs

2. டாடா ஸ்கார்லட்: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வலுவான சந்தை இருப்பை மேலும் விரிவுபடுத்த, ஸ்கார்லட் என்ற புதிய காம்பாக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா சியரா காரின் சப்-4 மீட்டர் வெர்சனாக இது இருக்கலாம். புதிய ஸ்கார்லட், டாடா நெக்ஸான் காரின் மெக்கானிக்கல் பாகங்களை பயன்படுத்தக்கூடும்.

3 & 4. டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் & அடுத்த தலைமுறை நெக்ஸான்: டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் பலமுறை சோதனை ஓட்டங்களின் போது பொது வெளியில் காணப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களுடன் விரைவில் சந்தைக்கு வரும். இதற்கிடையில், டாடா நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை நெக்ஸான் ஆரம்ப கட்ட மேம்பாட்டு நிலையில் உள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக திட்டமிடப்பட்டுள்ள புதிய தலைமுறை நெக்ஸான் ஆனது டாடாவின் எக்ஸ்1 பிளாட்ஃபார்மின் மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பாக இருக்கும்.

upcoming sub-4 meter suv car under price 10 lakhs

5. மாருதி சுஸுகி மைக்ரோ எஸ்யூவி: டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களுக்கு போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவி கார் ஒன்றை மாருதி சுஸுகி உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெயரிடப்படாத இந்த மாருதி கார், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னை பயன்படுத்தக்கூடும். இது 30 கி.மீ/லிட்டருக்கும் அதிகமான சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க வாய்ப்புள்ளது. இதன் வெளியீடு இன்னும் உறுதியாக தெரியவில்லை. 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் இதன் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது.

6. கியா சைரோஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி: தற்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் கியா சைரோஸ், 2026ஆம் ஆண்டுக்குள் முழு எலெக்ட்ரிக் எஸ்யூவியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வர வாய்ப்புள்ள இந்த எலெக்ட்ரிக் மாடல், 400 கி.மீ-க்கும் அதிகமான ரேஞ்சை வழங்கக்கூடும். வடிவமைப்பு மற்றும் கேபின் வசதிகள் உள்ளிட்டவை பெட்ரோல்/ டீசல் சைரோஸ் காருடன் ஒத்திருக்கும்.

upcoming sub-4 meter suv car under price 10 lakhs

7, 8 & 9. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எலக்ட்ரிக் எஸ்யூவி, விஷன் எக்ஸ் & விஷன் எஸ்: மஹிந்திரா நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் கார்களுக்கான என்.யு_ஐ.க்யு ஆர்க்கிடெக்சரையும், அதில் உருவாக்கப்பட்ட நான்கு புதிய கான்செப்ட்களையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது. இவற்றில், ஸ்கார்பியோவின் சிறிய பதிப்பான விஷன் எஸ் முதலில் வரக்கூடும். அதைத் தொடர்ந்து, காம்பாக்ட் கிராஸ்ஓவர் கார் வாங்குபவர்களை இலக்காகக் கொண்ட விஷன் எக்ஸ் வர வாய்ப்புள்ளது. இதற்கிடையில், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் அடிப்படையிலான எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது, அடுத்த ஆண்டு ஷோரூம்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. ஃபோக்ஸ்வேகன் டெரா: இந்தியாவுக்கான ஃபோக்ஸ்வேகனின் வரவிருக்கும் புதிய காம்பாக்ட் எஸ்யூவி காருக்கு டெரா என்று பெயரிடப்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகமான ஸ்கோடா கைலாக் காருடன் அதன் இன்டர்னல் பாகங்களை பகிர்ந்து கொள்ளும். இது உள்நாட்டில் ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் கூட்டணி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட MQB A0 இந்தியா பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும். 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இதில் இடம்பெறலாம்.

upcoming sub-4 meter suv car under price 10 lakhs

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்த சில வருடங்களுக்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை பற்றி மட்டும்தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இன்னும் ஹேட்ச்பேக், செடான் கார்களை எல்லாம் பார்த்தால், லிஸ்ட் நீண்டே கொண்டே போகும். இந்த லிஸ்ட்டில் கடைசியாக பார்த்த, ஃபோக்ஸ்வேகன் டெரா கார் தான் இந்தியாவில் முதலவதாக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது போல் தெரிகிறது. ஏனெனில், ஸ்கோடா கைலாக் கார் சில மாதங்களுக்கு முன்னரே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 9, 2025, 5:00 [IST]
English summary
Upcoming sub 4 meter suv car launches under price 10 lakhs hyundai and tata cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X