பைக் போல மைலேஜ் தரும் கார்கள்.. இத்தன இந்தியாவிற்கு வர போகுதா!.. இவற்றிற்காக வருஷ கணக்குல காத்திருக்கலாம்!

இந்தியர்கள் மிகப் பெரிய மைலேஜ் பிரியர்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று. இதனால்தான் நாட்டில் ஹைபிரிட் (Hybrid) அம்சம் கொண்ட கார்கள் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. மைலேஜை அதிகப்படுத்தி தரக் கூடிய ஓர் தொழில்நுட்பமே ஹைபிரிட் ஆகும். இந்த அம்சம் கொண்ட கார்களுக்கு நாட்டில் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைக் கவனத்தில் கொண்டே கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்காக ஹைபிரிட் டெக்னாலஜிக் கொண்ட கார் மாடல்கள் சிலவற்றை ஒதுக்கி இருக்கின்றனர்.

அந்தவகையில், இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாப் ஐந்து ஹைபிரிட் கார்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அனைத்தும் ஹைபிரிட் அம்சம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த லிஸ்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் ஐந்து கார்களின் இந்திய வருகையும் உறுதிப்படுத்தப்பட்டவை ஆகும். வாங்க அவை எவை என்பது பற்றி பார்க்கலாம்.

Upcoming hybrid suvs

ஹூண்டாய் கிரெட்டா ஹைபிரிட் (Hyundai Creta Hybrid): இந்தியர்களின் ஃபேவரிட் எஸ்யூவி ரக கார் மாடலாக கிரெட்டா உள்ளது. இதனால்தான் எஸ்யூவி கார்கள் விற்பனையில் இந்த கார் மாடல் எப்போதும் முன்னணியில் உள்ளது. இந்த கார் மாடலையே ஹைபிரிட் வசதியுடன் விற்பனைக்குக் கொண்டு வர ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதன் இந்திய வருகை 2027 ஆம் ஆண்டிலேயே அரங்கேற இருப்பதாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை கிரெட்டாவிலேயே ஹைபிரிட் அம்சத்தை நிறுவனம் வழங்க இருக்கின்றது. இந்த அம்சம் கொண்ட கிரெட்டா இப்போது எஸ்எக்ஸ்3 என்கிற குறியீட்டு பெயரிலேயே அழைக்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் ஆகிய ஆப்ஷன்களிலேயே கிரெட்டா விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கூடுதலாக ஹைபிரிட் அம்சத்தை வழங்கும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது.

Upcoming hyundai creta hybrid suv

கியா செல்டோஸ் ஹைபிரிட் (Kia Seltos Hybrid): ஹூண்டாய் நிறுவனம் அதன் கிரெட்டா கார் மாடலின் அடுத்த தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருப்பதைப் போலவே கியா நிறுவனமும் அதன் புகழ்பெற்ற செல்டோஸ் கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை உருவாக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதுமட்டுமல்ல இதை அது ஹைபிரிட் அம்சம் கொண்டதாகவும் தயார் செய்து வருவதாகக் கூறப்படுகின்றது.

ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடனேயே இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகையும் இந்தியாவில் 2027 ஆம் ஆண்டிலேயே அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடலின் 1.6 பெட்ரோல் மோட்டாரிலேயே ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைபிரிட் 7 சீட்டர் வெர்ஷன் (Toyota Urban Cruiser Hyryder 7-Seater): இந்தியாவில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் எஸ்யூவி கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலில் ஏற்கனவே ஹைபிரிட் அம்சத்தை டொயோட்டா நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அதாவது, இப்போது விற்பனையில் இருக்கும் கார் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் மாடலிலேயே ஹைபிரிட் தொழில்நுட்பத்தை டொயோட்டா வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், அது 5 சீட்டர் வெர்ஷனில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதன் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த 7 சீட்டர் வெர்ஷனிலும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அது வழங்க இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது இந்தியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இதன் இந்திய வருகை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின்கீழ் 177.6 வோல்ட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (New Gen Maruti Suzuki Grand Vitara): இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலை 5 சீட்டர் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே 5 சீட்டருடன் சேர்த்து 7 சீட்டரையும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இவை புதிய தலைமுறை ஆகும். இதனை ஹைபிரிட் தொழில்நுட்பத்துடனும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது மாருதி சுஸுகி. ஏற்கனவே இந்த கார்களின் சோதனையோட்ட பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே அடுத்த ஒரு சில மாதங்களில் இந்த காரின் அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுஸுகி ஃபாரான்க்ஸ் ஹைபிரிட் (Maruti Suzuki Fronx Hybrid): இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலையே ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மாருதி சுஸுகி தற்போது களமிறங்கி இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹைபிரிட் எனும் பேட்ஜ் உடன் ஃப்ரான்க்ஸ் சோதனை மாடல் ஒன்று சமீபத்தில் சோதனையோட்டம் செய்யப்பட்டது. ஆகையால், இதன் அறிமுகமும் விரைவில் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் வருகையை அரங்கேறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதேபோல், அதிக மைலேஜை வழங்கக் கூடிய ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்களுக்கும் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டே எஸ்யூவி மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் காம்பினேஷனுடன் இந்த கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவற்றிற்கு சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 22, 2025, 15:00 [IST]
English summary
Upcoming suv cars with hybrid tech in india here is more details
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+