வரிசையா 4 கார் வருது! டிசம்பரில் களை கட்டப்போகுது சேல்ஸ்!
நவம்பர் மாதம் முடியப்போகிறது. 2025ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் விரைவில் பிறக்கப்போகிறது.இந்த டிசம்பர் மாதம் எஸ்யூவி கார்களுக்கான மாதம் என்றே சொல்லலாம் 4 புதிய எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளன. இதில் மாருதியின் முதல் இவி காரும் அடங்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி இ-விட்டாரா
மாருதி நிறுவனம் மதல் பயணிகள் எலெக்ட்ரிக் காரை களம் இறக்கப்போகிறது. இந்த காரை அந்நிறுவனம் ஹார்ட்டிரெக்ட் இஸ்கேட்போர்ட் பிளாட் ஃபார்மில் உருவாக்கியுள்ளது.இந்த கார் முழு சார்ஜில் 500 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.இ்நத கார் 49kWh மற்றும் 61kWh பேட்டரி பேக்குகள் உள்ளன. இது போக இந்த காரில் 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸஅடம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, லெவல் 2 அடாஸ், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், சீட் வென்டிலேஷன் என பல ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் வரும் டிசம்பர் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் பெட்ரோல்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இறுதியாக தனது ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களில் பெட்ரோல் வெர்ஷனைவெளியிட திட்டமிட்டு வருகிறது.இந்த காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்வு டைரக்ட் இன்ஜெக்ஷன் இன்ஜின் பொரத்தப்ப்டடுள்ளது. இது 168 பிஎஸ் பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் வரும் டிசம்பர் 9ம் தேதி விற்பனையக்கு அறிமுகமாகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் தான் தனது சியாரா காரை அறிமுகப்படுத்திய நிலையில் அதற்கும் இந்த காரை விற்பனைக்க கொண்டுஐ வருகிறது. இ்நடத காரவிலை குறித்த விபரங்கள் அன்று தான் வெளியாகும். இந்த காரின் டீசல் காரின் விலையில் கிட்டத்தட்ட அதே விலையில் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது.

கியா செல்டோஸ்
கியா நிறவமன் 2ம் தலைமுறை செல்டோஸ் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சர்வதேச அளவில் கொரியாவில் இந்த கார் வரும் டிசம்பர் 10ம் தேதி காட்சிப்படுத்தப்படவுள்ளது.இந்த கார் இந்தியாவில் 2026ம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகதிறது. இந்த கார் இந்தியாவில் கியா நிறுவனம் ஒரு நன்மதிப்பை பெற முக்கியமான காரணமாக இருந்த கார் ஆகும். அதன்பிறகு மிகப்பெரிய அப்டேட் தற்போது தான் நடக்கவுள்ளது.
இந்த கார் மூடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்படுவதை காண முடிகிறது. இதில் சி விடிவ டிஆர்எல், நீளவாக்கில் வடிவமைக்கப்பட்ட கிரில், ஆகிய அம்சங்களை தெளிவாக காணமுடிகிறது. இன்ஜினை பொருத்தவரை அதே 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது. இந்த கார் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் ஆப்ஷவன்களுடன் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 4 கார்கள் நிச்சயம் மார்கெட்டையே புரட்டி போடும் வல்லமை கொண்டது. மாருதியின் முதல் இவி கார், டாடாவின் பெட்ரோல் கார்கள், கியாவின் செல்டோஸ் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம். இதில் நீங்கள் அதிகம் விரும்பும் கார் எது என கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








