டாடா கார்களின் ரேஞ்ச் 2026இல் மொத்தமா மாற போகுது! குறிச்சி வெச்சிக்கோங்க... இந்த மூணு காரும் பந்தயம் அடிக்கும்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் புதிய சியரா (Sierra) எஸ்யூவி காரை சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இது இல்லாமல், சியரா இவி எலெக்ட்ரிக் காரையும் 2026இல் டாடா அறிமுகம் செய்யவுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சியரா இவி வெளியாக உள்ள நிலையில், இவ்வாறு வருகிற 2026ஆம் ஆண்டில் பல புதிய கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அவற்றுள் தற்போதைக்கு கிட்டத்தட்ட உறுதிச் செய்யப்பட்டுள்ள டாடா கார்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2026 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift): ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா பன்ச், 2026இன் தொடக்கத்தில் ரூ.6 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு தற்சமயம் விற்பனையில் இருக்கும் பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை ஒத்திருக்கும். புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் கனெக்டட் லைட் பார், நவீன பம்பர், மேம்படுத்தப்பட்ட அலாய் சக்கரங்கள் மற்றும் புதுமையான பின்புறத் தோற்றம் ஆகியவை இருக்கும்.

upcoming tata cars in 2026

உட்புறத்தில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், பன்ச் இவி காரின் 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம், வென்டிலேட்டட் இருக்கைகள் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படலாம். தற்போதைய பன்ச் காரின் ஆல்ஃபா (ALFA) தளத்திலேயே தொடர்ந்து புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் உருவாக்கப்பட உள்ளதால், தற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) பவர்டிரெய்ன்களில் மாற்றம் இருக்காது. இந்த மேம்பாடுகள் பன்ச் காருக்கு புதிய பொலிவை வழங்கும்.

2026 டாடா சியரா இவி (Tata Sierra EV): முன்னரே கூறியதுபோல், சியரா எலெக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனைக்கு வர உள்ளது. டாடா சியரா இவி 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (மார்ச் மாதத்திற்குள்) அறிமுகப்படுத்தப்படும் என டாடா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இது ரூ.16 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலையில் RWD (பின்புறச் சக்கர இயக்கி) மற்றும் AWD (அனைத்துச் சக்கர இயக்கி) ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming tata cars in 2026

அர்கோஸ் (Argos) தளத்தில் இரட்டை மோட்டார்களை ஆதரிக்கும் ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்சர் வடிவமைப்பில் சியரா எலெக்ட்ரிக் கார் கட்டமைக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில் உள்ள சனந்த் ஆலையில் பெட்ரோல்/டீசல் சியரா காருடன் சியரா இவி காரும் தயாரிக்கப்படும். தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், மூடிய கிரில்லுடன் தனித்துவமான முன்பகுதி இடம்பெறும்.

சியரா இவி காரின் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், ஏற்கனவே விற்பனையில் உள்ள கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் 55kWh பேக் மற்றும் ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் 65kWh பேக் ஆகியவை சியரா எலெக்ட்ரிக் காருக்கு வழங்கப்படலாம். இது டாடா எலெக்ட்ரிக் கார்கள் வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும்.

அடுத்த தலைமுறை டாடா நெக்ஸான் (Next-Generation Tata Nexon): டாடா மோட்டார்ஸ் அடுத்த தலைமுறை நெக்ஸான் கார் பணிகளை கருட் (Garud) என்கிற பெயரில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும், புதிய நெக்ஸான் 2026ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming tata cars in 2026

2017ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் நெக்ஸானின் புதிய தலைமுறை மாடல் புதிய தளத்திற்கு மாறும் வாய்ப்புள்ளது. இது முதல் தலைமுறை நெக்ஸானின் ஒன்பது ஆண்டுகால பயணத்தை முடிவுக்குக் கொண்டுவரும். டாடா மோட்டார்ஸின் சமீபத்திய வடிவமைப்பு மொழிக்கு ஏற்ப, நெக்ஸானின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இருப்பினும், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) பவர்டிரெய்ன்கள் தொடரப்படலாம். டீசல் என்ஜினுக்கு பிஎஸ்7 (BS7) மேம்பாட்டுச் செலவு அதிகம் என்பதால் அதன் எதிர்காலம் நிச்சயமற்றது. புதிய நெக்ஸான் மாதத்திற்கு 12,000 யூனிட்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது; இது பின்னர் அதிகரிக்கப்படும். நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரும் இதனை தொடர்ந்து ஒரு புதுப்பிப்பைப் பெறும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து தனது சந்தை ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. 2026இல் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த கார்களை வைத்து பார்க்கும்போது கார்கள் மார்க்கெட்டில் டாடா தீவிரமாக இறங்க உள்ளதை அறிய முடிகிறது. மேலும், இந்த தொகுப்பில் நாம் பார்க்காத காரும் அடுத்த ஆண்டில் டாடாவில் இருந்து அறிமுகம் செய்யப்படக்கூடும். இந்த தொகுப்பின்படி பார்க்கும்போது, சியரா இவி எலெக்ட்ரிக் காருக்கு முன்னதாக பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 19, 2025, 22:48 [IST]
English summary
Upcoming tata cars in 2026 punch facelift and sierra ev and new nexon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X