புதிய பெயரில் 7 டாடா கார்கள்! மாருதியே ஒரு நிமிஷம் ஆடி போயிருப்பாங்க!

டாடா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 30 புதிய கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அதன் டீலர்களுடன் நடந்த கூட்டத்தில் அறிவித்துள்ளது. இந்த கார்கள் குறித்த சில முக்கியமான தகவல்களையம் வெளியிட்டுள்ளது. மிகபெரிய அளவில் தங்கள் கார்களின் மாடல் எண்ணிக்கை அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது விற்பனையில் மஹிந்திரா, ஹூண்டாய் நிறுவனங்களுடன் போட்டியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது டீலர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியது. இந்த சந்திப்பில் அந்நிறுவனத்தின் அடுத்த 5 ஆண்டு கால திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Upcoming Tata Cars in New Name

இந்த அறிவிப்பில் அந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 30 கார்களை வெளியிட திட்டம் வைத்திருப்பதாகவும், அதில் 7 கார்கள் முற்றிலும் புதிய பெயரில் இடம் பெறும் எனவும், பாக்கி உள்ள 23 கார்கள் ஏற்கனவே வெளியான பெயரில் அல்லது பழைய கார் பெயரை பயன்படுத்தி புதிய கார் என்ற ரீதியிலும், ஏற்கனவே விற்பனையாகி வரும் காரின் அப்டேட் அல்லது ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் ஏற்கனவே சியாரா என்ற பெயரிலும், அவ்னியா என்ற பெயரிலும் புதிய கார்களை களம் இறக்க தயாராகி வருகிறது. இந்த இரண்டு கார்களும் டாடாவின் அடுத்த இவி டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்ட கார்களாக இருக்கும். இது போக கம்பஷன் இன்ஜினில் புராடெக்ட் ஏ, மற்றும் புராடெக்ட் பி ஆகிய இரண்டு கார்களையும், இவியில் புராடெக்ட் எக்ஸ், புராடெக்ட் ஒய் என்ற இரண்டு கார்களையும் களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Upcoming Tata Cars in New Name

இதில் சியாரா காரை இந்த நிதியாண்டிற்குள் இந்திய மார்கெட்டில் களம் இறக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் வெளியாக வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்காக டாடா நிறுவனம் ரூ35 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டாடாவின் ஃபோர்ட்போலியோ அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் பஞ்ச் பெட்ரோல் காரை மிட் சைக்கிள் அப்டேட் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக டியாகோ மற்றம் டிகோர் ஆகிய கார்கள் தான் அப்டேட் செய்யப்படவுள்ளன. இது போக ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களின் பெட்ரோல் வெர்ஷன் கார் இந்த நிதியாண்டிற்குள் வர வாய்ப்புள்ளது.

Upcoming Tata Cars in New Name

டாடா சியாரா காரில் இதே இன்ஜின் தான் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இது போக அடுத்த தலைமுறை நெக்ஸான் காரை உருவாக்க அந்நிறுவனம் தற்போது திட்டமிட்டு வருகிறது. இதுவும் மார்கெட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக ஸ்கார்லெட் இவி, பஞ்ச் இவி ஆகிய கார்களும், அடுத்தடுத்த பைப் லைனில் இருக்கின்றன.

டாடாவிடம் நானோ, சுமோ, எஸ்டேட் போன்ற நிறுத்தப்பட்ட கார்களின் பெயருக்கான காப்புரிமையும் இருக்கின்றன. டாடா நிறுவனம் தனது புதிய காருக்கு இந்த பெயர்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது.அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் மொத்தம் 60 மாதங்கள் உள்ளன. இதில் 30 கார்கள் என்றால் 2 மாதத்திற்கு ஒரு கார் என்ற ரீதியில் அறிமுகமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்க ஏற்றார் போல் போட்டிகளும் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில் டாடா நிறுவனத்தின் இந்த திட்டம் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. போட்டி நிறுவனங்கள் இதனால் பதற்றத்தில் இருக்கிறது. டாடாவின் திட்டத்திற்கு ஈடு செய்யும் வகையில் தங்கள் திட்டங்களை வகுக்க திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 25, 2025, 19:00 [IST]
English summary
Upcoming tata cars in new name 7 new models
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X