அடி மாட்டு விலையில் மினி சியராவை களத்தில் இறக்கும் டாடா! மார்க்கெட்ல இருந்து மாருதி நடையை கட்ட வேண்டியதுதான்!

இந்தியாவில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களின் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இவற்றின் விலை (Price) ஓரளவிற்கு குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம். ஓரளவிற்கு குறைவான விலையில் எஸ்யூவி ரக கார்கள் என்பதால், வாடிக்கையாளர்கள் பலரும் இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்களை அதிகளவில் வாங்குகின்றனர்.

எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே ஒரு காரை விற்பனை செய்து வருகிறது.

Tata Sierra EV

அது டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகும். இதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் மேலும் ஒரு புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை ஸ்கார்லெட் (Scarlet) என்ற குறியிட்டு பெயரில் அழைத்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள் 7 புத்தம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்த ஸ்கார்லெட் ஒன்றாக இருக்கும்.

Tata Nexon

அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா (Tata Sierra) காரையும், இந்த 7 கார்களில் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சியரா காரை போலவே, ஸ்கார்லெட் காரும் பாக்ஸி டிசைனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது மினி சியாராவாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தேவைப்பட்டால் இந்த ஸ்கார்லெட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடியும். அதாவது ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களுக்கும் சப்போர்ட் ஆக கூடிய வகையிலான பிளாட்பாரத்தில் டாடா ஸ்கார்லெட் கார் உருவாக்கப்படவுள்ளது.

ஆனால் இதன் தொழில்நுட்ப விபரங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரை விற்பனை செய்து வருகிறது. அதே செக்மெண்ட்டில் மற்றொரு புதிய கார் வந்தால், டாடா நெக்ஸான் காரின் விற்பனை குறையலாம்.

இந்த பிரச்னையை தடுப்பதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஸ்கார்லெட் காரை லைஃப்ஸ்டைல் எஸ்யூவி (Lifestyle SUV) ரகத்தில் நிலை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஒரு லைஃப்ஸ்டைல் எஸ்யூவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களை இந்த கார் மூலம் தனியாக கவர முடியும்.

அத்துடன் டாடா நெக்ஸான் காரின் விற்பனை குறையாமலும் பார்த்து கொள்ள முடியும். இந்த புதிய காரின் வருகை, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) போன்ற இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் பிரபலமாக இருந்து வரும் கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால், டாடா ஸ்கார்லெட் காரின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை வெகுவாக உயர்த்த இந்த கார் உதவி செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Sunday, July 6, 2025, 23:11 [IST]
English summary
Upcoming tata scarlet sub 4 meter compact suv all you need to know
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+