ரூ1 கோடிப்பே! இவ்வளவு காசுக்கு இந்த கார்ல என்னதாங்க இருக்குது?
பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்5 என்ற காரை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளுது. இதில் காஸ்மெட்டிக் அப்டேட்கள், புதிய அம்சங்கள், மைல்டு ஹைபிரிட் பெட்ரோல், டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது சொகுசு எஸ்யூவி வாகனங்களை புதுப்பித்து வருகிறது. அதன்படி அந்நிறுவனம் தனது எக்ஸ்5 காரை தற்போது அப்டேட் செய்துள்ளது. இந்த கார்கள் முழுமையாக சென்னையில் உள்ள ஆலையில் தான் கட்டமைக்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் கார் ரூ1 கோடி என்ற விலையிலும், டீசல் இன்ஜின் கொண்ட கார் ரூ1.15 கோடி என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.

இந்த புதிய எக்ஸ் 5 கார் அக்ரஸவான ரோடு ஸ்டான்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 இன்ச் அலாய் வீல்கள், ரீ ஒர்க் செய்யப்பட்ட ஏர்பிரீத்தர்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கம் மேட்ரிக்ஸ் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், பின்பக்கம் ஹைடெக் லுக் வழங்கக்கூடிய இலுமினேட்டட் எக்ஸ் லோகோ வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் ப்ரூக்ளின் கிரே, கார்பன் பிளாக், டான்ஸனைட் ப்ளூ, மினரல் ஒயிட், ஸ்கை கிராப்பர் கிரே, பிளாக் சப்பையர் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காருக்குள் பெரிய கர்வ்டு டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளுது. இந்த டிஸ்பிளே டேஷ்போர்டில் பெரியதாக உள்ளது. டிரைவருக்கு 12.3 இன்ச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்டிற்கு 14.9 இன்ச் ஸ்கிரீன் ஆகியவை இணைந்து சிங்கிள் பேனல் கிளாஸில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 4 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் எம்-ஸ்போர்ட் புரோ பேக் பியானோ பிளாக் வேரியன்டில் வருகிறது. இது போக எம் சீட் பெலட்கள், ஆடியோவிற்காக 16 ஸ்பீக்கர் கொண்ட ஹார்மன் கார்டன் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொரத்தவரை எக்ஸ்-டிரைவ் 40ஐ எஸ் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 381 எச்பி பவரையும் 520 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.4 நொடியில் பிக்கப் செய்து விடும்.

இந்த காரின் டீசல் இன்ஜினை பொருத்தவரை எக்ஸ்டிரைவ்30டி டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 286 எச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.1 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த காரில் 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிட் சிஸ்டம் மட்டும் கூடுதலாக 12 எச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.
இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஸ்டெப்ரானிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக எக்ஸ் ஆஃப்ரோடு பேக்கேஜூம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 விதமான மோடுகள் உள்ளன. சாண்ட், கிரேவல், ராக்ஸ், ஸ்னோ உள்ளிட்டமோடுகள் உள்ளன. சஸ்பென்ஸன் உயரத்தை ஆட்டோமெட்டிக்காக உயர்த்தும் ஆப்ஷனும் உள்ளது. இது திரட்டால் ரெஸ்பான்ஸ் டிராக்ஷன் கண்டரோலை வைத்து காருக்கு அடியில் உள்ள பாதுகாப்பை அதிகரித்து உழைப்பை அதிகரிக்கிறது. இந்த காரில் எக்ஸ் டிரைவ் ஆல் வீல் சிஸ்டம் இருக்கிறது.
இந்த காரில் ஸ்போர்ட் வெர்ஷனை விரும்புபவர்களுக்கு எம்- ஸ்போர்ட் ப்ரோ வேரியன்ட் கிடைக்கிறது. இதில் பல்வேறு காஸ்மெட்டிக் அப்டேட்கள், கிளாஸ் பிளோக் கிட்னி கிரில் டெயில் பைக் மற்றும் ஏர் பிரீத்தர்,பின்பக்கம் டெயின் பைப், சிவப்பு நிற பிரேக் கேலிபர்கள், எம் எக்ஸாஸ் சிஸ்டம், உள்ளது. இதில் ஐ டிரைவ் சிஸ்டம் இருக்கிறது. மை பிஎம்டபிள்யூ ஆப் வழியாக கனெக்டெட் டிரைவ் சர்வீஸஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் டிஜிட்டல் கீ பிளஸ் அம்சம் மூலம் காரையே ஸ்மார்ட் போன் மூலம் அன்லாக் செய்யலாம். பார்க் அசிஸ்ட் மூலம் தானாக பார்க் செய்யும். மற்றும் ஆட்டோமெட்டிக் ரிவர்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பாதுகாப்பிற்காக மல்டிபிள் ஏர்பேக்குகள், மற்றும் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார் எக்ஸ்5 கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த கார் நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது இதில் அப்டேட் வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









