விலை 5 லட்ச ரூபா கூட இல்ல! மாருதி ஆல்டோ கதையை முடிக்க வரும் புதிய கார்! டாடாவுக்கும் ஆப்பு இருக்கு!

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது தனது தயாரிப்புகளை அப்டேட் செய்து விற்பனைக்கு களமிறக்கி வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் 2 அப்டேட் செய்யப்பட்ட மாடல்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

அவை ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் (Renault Triber Facelift) மற்றும் ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் (Renault Kiger Facelift) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல், இந்திய சந்தையில் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Renault Kwid Side View

ரெனால்ட் க்விட் கார், ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் (Entry-level Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுடன், ரெனால்ட் க்விட் போட்டியிட்டு வருகிறது.

இந்திய சந்தையில் தற்போது ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. எனவே ரெனால்ட் நிறுவனம் க்விட் காரை அப்டேட் செய்து ஃப்ரெஷ்-ஆக விற்பனைக்கு களமிறக்குவது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. ரெனால்ட் க்விட் காரில் தற்போதைய நிலையிலேயே ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

Renault Kwid

இதில், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் ரெனால்ட் க்விட் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். மேற்கண்ட வசதிகள் உடன், ஒரு சில புதிய வசதிகளையும், ரெனால்ட் க்விட் காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலில் நாம் எதிர்பார்க்கலாம்.

அதேபோன்று ரெனால்ட் க்விட் காரின் டிசைனும் (Design) மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் செயல்திறனை பொறுத்தவரையில், இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. அதாவது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும்.

இதன்படி ரெனால்ட் க்விட் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஹெச்பி பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை 4.70 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ரெனால்ட் க்விட் காரின் டாப் வேரியண்ட்டின் தற்போதைய விலை 6.45 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் புதிய வசதிகள் வழங்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால், ரெனால்ட் க்விட் காரின் புதிய மாடலின் விலை சற்று உயர்த்தப்படலாம்.

இருப்பினும் ரெனால்ட் க்விட் காரின் புதிய மாடலின் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியில் நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மிகவும் குறைவான விலையில் ஒரு ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு புதிய ரெனால்ட் க்விட் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 500 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. ஆனால் புதிய மாடலின் வருகைக்கு பின்னர், ரெனால்ட் க்விட் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 18:19 [IST]
English summary
Updated renault kwid launch soon check all details here
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+