கம்மி விலை, நல்ல காரு, வாரண்டி வேற தராங்க! யூஸ்டு காரை இவ்வளவு பேர் வாங்குறாங்களா?

இந்தியாவில் புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட பழைய கார்கள் தான் அதிகம் வாங்கப்படுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார்களை விட பழைய கார்களை மக்கள் அதிகம் விரும்ப துவங்கிவிட்டனர். குறைவான விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் மத்தியில் பழைய கார்கள் மீதான மோகம் அதிகமாகியுள்ளது.

சமீபத்தில் CRISIL அமைப்பு பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பவனை குறித்த ரேட்டிங் ஒன்றை வழங்கியுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை 8-10 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இது மட்டுமல்ல இந்த நிதியாண்டில் மொத்தம் 60 லட்சம் கார்கள் பயன்படுத்தப்பட்ட மார்கெட்டில் விற்பனையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Used Car Sales

image used for representation purpose only

இதற்கு முக்கியமான காரணம் பயன்படுத்தப்பட்ட வாகன மார்கெட்டில் குறைவான விலையில் வாகனங்களை வாங்க முடியும். மேலும் டிஜிட்டல் தளத்தில் தரவுகள், வாரண்டி உள்ளிட்ட பல விஷயங்கள் மக்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதாலும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்க லோன் கிடைப்பதாலும் இந்த வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு புதுக்காருக்கும் சமமாக ஒரு பழைய கார் விற்பனவையாகி வந்தது. இது தற்போது அதிகரித்து 1.4 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 100 புதிய கார்கள் விற்பனையானால் 140 பழைய கார்கள் விற்பனையாவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவது அதிகரித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

Used Car Sales

image used for representation purpose only

பல வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கார்கள் இந்தியாவை விட அதிகம் வாங்கப்படுகின்றனர். 100 புதிய கார்கள் விற்பனை செய்யப்படும் இடத்தில் அமெரிக்காவில் 250 பழைய கார்களும், பிரிட்டனில் 400 பழைய கார்களும், ஜெர்மனியில் 260 பழைய கார்களும், விற்பனை செய்யப்படுகிறது. இதை ஒப்பிடும் போது இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை குறைவு தான்.

இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் பல தளங்கள் இருகு்கிறது. இந்த தளங்கள் மூலமாக தான் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாகிறது. மொத்தம் விற்பனையாகும் பயன்படுத்தப்பட்ட கார்களில் 3ல் 1 பங்கு கார்கள் இந்த தளத்தின் மூலமாக தான் விற்பனை செய்யப்படுகிறது.

Used Car Sales

image used for representation purpose only

என்னதான் இந்த நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை செகண்ட் ஹேண்டில் விற்பனை செய்து கொடுத்தாலும் பெரிய லாபத்தை ஈட்ட முடியவில்லை. சரியான வாடிக்கையாளரை பெறுவது, காரை ரிப்பர் செய்வது, பைனான்ஸிங் என பல விஷயங்களால் இந்நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடிவதில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது இந்தியர்கள் பலருக்கு கெளரவ குறைச்சலாக இருந்து வந்த மனநிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. நல்ல கார்களை குறைந்த விலையில் வாங்குவதில் இருக்கும் லாபத்தை பற்றி யோசித்து வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் இந்த மார்கெட் மிகப்பெரிய அளவில் இருக்கும் .

More from DriveSpark

Article Published On: Saturday, July 12, 2025, 12:10 [IST]
English summary
Used car sales growing twice as fast as new car sales
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X