மாருதியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த ரெனால்ட்! இப்படி ஒரு காரை தான் எல்லாரும் வாங்குறாங்களா?

இந்திய ஆட்டோமொபைல் மார்கெட்டில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான வரி அதிகரித்த போதிலும், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பயன்படுத்தப்பட்ட கார் தளமான சிம்பானி தெரிவித்ததன்படி, 2024ம் ஆண்டில், 76% வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் அல்லது இரண்டாம் நிலை வாகனத்தை வாங்கினார்கள் என தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 3% அதிகரிப்பாகும்.

சுவாரஸ்யமாக, ரெனால்ட்டின் பயன்படுத்தப்பட்ட கார்கள் மாரூதியை விட அதிக தேவை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. புதிய மாடல்களின் விற்பனை குறைந்து வருவதற்குப் பின்னாலும், ரெனால்ட் க்விட் 2024ம் ஆண்டில் மிகவும் தேடப்பட்ட செகண்ட் ஹேண்ட் காராக தோன்றியது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் இரண்டாவதாகவும் மற்றும் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் முன்றாவது, பாலேனோ நான்காவது இடத்தைப் பிடித்தது.

used cars sales 2024

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் வாங்குபவர்களில் ஹேட்ச்பேக்குகள் தொடர்ந்து முன்னணி தேர்வாக உள்ளன. இந்த வாங்குபவர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி 25 முதல் 30 வயதுடைய இளைஞர்களாக உள்ளனர். இந்த வயது வரம்பில் 60% பேர் கடன் உதவி மூலம் வாகனம் வாங்கும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தனர் மற்றும் மொத்தத்தில் 56% பேர் கடன் உதவி பெற்று வாகனத்தை வாங்கினர்.

பயன்படுத்தப்பட்ட கார் வாங்குபவர்களின் சராசரி வயது 2023ம் ஆண்டில் 34 ஆண்டுகளிலிருந்து 2024ம் ஆண்டில் 32 ஆண்டுகளாக குறைந்தது. பெட்ரோல் வாகனங்கள் பிரபலமாக இருந்தன. 82% விற்பனை இந்த பெட்ரோல் வாகனத்தில் தான் நடைபெற்றது. டீசல் கார்களில் 12% குறைவு காணப்பட்டது, அதே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் முறையே 4% மற்றும் 2% பங்கைப் பிடித்தன.

used cars sales 2024

பெங்களூரு, டெல்லி என்சிஆர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் நாட்டை வழிநடத்தின. இந்த நகரங்கள் பயன்படுத்தப்பட்ட வாகன பரிவர்த்தனைகளின் மையமாக மாறியுள்ளன. இந்த டிரெண்ட் இந்த நகர்ப்புறப் பகுதிகளில் இளம் வயது மக்கள்தொகையில் கார் உரிமைப் பெறுவதில் அதிகரித்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.

முதல் முறை வாங்குபவர்களுக்கு கூடுதலாக, தங்கள் வாகனங்களை மேம்படுத்தும் நபர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது. 2024ம் ஆண்டில், கடந்த 2023ம் ஆண்டில் 12% பேர் மட்டுமே தங்கள் கார்களை மேம்படுத்தினார்கள். கடந்தாண்டில் 22% பேர் தங்கள் கார்களை மேம்படுத்தியுள்ளனர். இது 83% என்ற அற்புதமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த மாற்றம் நுகர்வோர் மத்தியில் சிறந்த மாடலீ்களுக்கான அதிகரித்து வரும் ஆசையை காட்டுகிறது.

used cars sales 2024

மேலும் இந்த அறிக்கையில், சிம்பானி தளத்தில் அனைத்து பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை 26% பெண்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த விற்பனை ஆட்டோமொபைல் சந்தையில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. சமீபகாலமாக பெண்கள் அதிக அளவில் வாகனங்களை வாங்கி பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

முதல் முறை செகண்ட் ஹேண்ட் கார் வாங்கம் உரிமையாளர்களுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 73% இலிருந்து இந்த ஆண்டு 76% க்கு உயர்ந்துள்ளது. இது சந்தைக்கு புதிதாக நுழையும் இளம் இந்தியர்களிடையே கார்களை வாங்குவதில் அதிகரித்து வரும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

வாடிக்கையளர்கள் விருப்பங்கள் மாறும்போது, ஹேட்ச்பேக்குகள் அவற்றின் மலிவுத்தன்மை மற்றும் நடைமுறைத்தன்மை காரணமாக தற்போது ஆதிக்கம் செலுத்துகின்றன. வரி அதிகரிப்பு போன்ற சவால்களுக்கிடையில், இந்தியாவின் பயன்படுத்தப்பட்ட கார் மார்கெட் பல்வேறு வாடிக்கையாளர்கள் மக்கள்தொகை மற்றும் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து வழிநடத்தி வருவதாக தரவு தெரிவிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இதற்கு இந்த அறிக்கை மிகப்பெரிய சாட்சியாக இருக்கிறது. இந்தாண்டும் இந்த செக்மெண்டில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2025, 10:38 [IST]
English summary
In 2024, India's used car market experienced notable growth, with 76% of buyers being first-time purchasers. Hatchbacks remain the preferred choice, primarily among young consumers, reflecting evolving preferences and increased participation of women in vehicle ownership.
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X